ஜூடோ பயிற்சியாளரால் பல முறை தூக்கிவீசப்பட்டு, 3 மாதமாக கோமாவில் இருந்த 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தாய்வானில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாய்வானில் கடந்த ஏப்ரல் மாதம் புதிதாக ஜூடோ பயிற்சிக்கு சென்ற அச்சிறுவனுக்கு ஜூடோ கற்றுத்தருவதாக கூறி, ஜூடோ அசைவுகளை ஒழுங்காக கற்றுக் கொள்ளாததால் பயிற்சியாளர் 27 முறை தரையில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.
இதில், நிலைகுலைந்த சிறுவன் மயங்கி விழுந்த நிலையில், கடுமையான தலைவலி மற்றும் வாந்தியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சிறுவனுக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து கோமா நிலைக்கு சென்ற சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.