• Sat. Nov 30th, 2024

அடுத்த 24 மணிநேரம் மிக முக்கியமானதாக இருக்கும் – உக்ரேன் ஜனாதிபதி

Feb 28, 2022

ரஷ்யாவின் படையெடுப்புக்குஎதிராக தனது நாட்டை பாதுகாப்பதில் அடுத்த 24 மணிநேரம் மிக முக்கியமானதாக இருக்கும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் ஞாயிற்றுக்கிழமை மாலை தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை டவுனிங் ஸ்ட்ரீட் செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்காப்பு உதவி உக்ரேனுக்கு சென்றடைவதற்கு உத்திரவாதம் அளிக்க இங்கிலாந்தும் அதன் நட்பு நாடுகளும் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று ஜோன்சன் இந்த உரையாடலில் கூறியதாகவும் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜோன்சன் படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக் கொண்டமைக்காக ஜெலென்ஸ்கியின் தலைமையைப் இதன்போது பாராட்டினார்.