• Fri. Nov 1st, 2024

ஆப்கான் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் சூழ்நிலை!

Sep 17, 2021

ஆப்கானிஸ்தானில் வேலை வாய்ப்பின்மை தீவிரமாகியுள்ளதால் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தலீபான்கள் ஆட்சியின் கீழ் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தாலும், வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக வேலை தேடி இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக காபூல் வாசிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்குக் கிளம்ப விருப்பம் தெரிவிக்கும் அவர்கள், தலிபான்கள் விரைவில் இந்நிலைமைகளை சரி செய்வார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.