• Fri. Apr 19th, 2024

பெண்ணை தீக்குளிக்கவைத்த தலிபான்கள்; ஆப்கான் பெண் நீதிபதி வெளியிட்ட பகீர் தகவல்

Aug 21, 2021

ஆப்கானிஸ்தானை தாலிபான் முழுமையாகக் கைப்பற்றியுள்ள நிலையில், , அவர்களின் கொடூரமான வன்முறை மற்றும் அடக்குமுறை கதைகள் அம்பலமாகியுள்ளன.

அமெரிக்காவில் வசிக்கும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி நஜ்லா அயூபி (Najla Ayoubi) , இது குறித்த பல சம்வங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

அந்த தகவல்கள் பெண்களை தாலிபான் நடத்திய கொடூரக் கதைகள் பீதி உணர்வை மேலும் அதிகரித்துள்ளன.

வடக்கு ஆப்கானிஸ்தானில் தாலிபான் (Taliban) பயங்கரவாதிகளுக்கான உணவை தயாரித்த ஒரு பெண்ணின் சமையல் நன்றாக இல்லை என அந்த பெண்ணை தீக்குளிக்க வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளதாக அவர் கூறினார்.

அதோடு , பெண்கள் பாலியல் அடிகைகளாக நடத்தப்பட்டு, சில சமயங்கள் அவர்களை சவப்பெட்டிகளுக்குள் வைத்து, அண்டை நாடுகளுக்கு பாலியல் அடிமைகளாக பயன்படுத்த கடத்தப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளதாக, அயோபி (Najla Ayoubi) கூறினார்.

அத்துடன் பெண்களை, தலிபான் பயங்கரவாதிகளுக்கு திருமணம் செய்து கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்டனர் என அந்த நீதிபதி தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் பிறந்த நீதிபதி அயோபி (Najla Ayoubi) 1990 களின் தலிபான்களின் எழுச்சிக்கு முன்னாதாக உள்ள கால கட்டத்தில் கல்வி கற்றவர்.

1996 ஆம் ஆண்டு தாலிபான்கள் கைப்பற்றுவதற்கு முன்பு அவர் தனது மாகாணத்தின் முதல் பெண் நீதிபதி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் இன்னும், இருக்கும் பல சமூக ஆர்வலர்களுடன் தொடர்பில் உள்ள நிலையில், அவர்கள் பல திகில் கதைகளை விவரித்துள்ளதுடன், ஆப்கானின் தற்போதைய நிலைமை குறித்து அவர்கள் பீதியில் உள்ளனர்.

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பின்னர் , தலிபான்கள் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும் என்றும், ஆப்கானை ஒரு பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதாகவும் உறுதியளித்தனர்.

எனினும் RTA பாஷ்டோ என்ற தொலைக்காட்சி நிலையத்தில் பணிபுரியும் ஆப்கானிஸ்தான் பெண் அறிவிப்பாளர் ஷப்னம் தவ்ரான் (Shabnam Tawran), ஆட்சி மாற்றத்தை காரணம் காட்டி அவரது அலுவலகத்திற்குள் நுழையக் கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளார். நான் RTA பாஷ்டோ அலுவலகத்திற்கு சென்றேன், ஆனால் ஆட்சி மாறிவிட்டதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள். உங்களுக்கு அனுமதி இல்லை, வீட்டிற்குப் போ” என்று அவரிடம் கூறப்பட்டதாக, ஒரு வீடியோ செய்தியில் கூறியுள்ளார்.

மற்றொரு நிகழ்வில், ஆப்கானிஸ்தானின் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) உறுப்பினர் சமீரா அஸ்காரி ( Sameera Askari), தலிபான்கள் தங்கள் நாட்டை கைப்பற்றியதைத் தொடர்ந்து, நிலைமை மோசமாக ஆகும் என்றும், விளையாட்டு வீராங்கனைகள், தங்கள் பாதுகாப்பிற்காக, வீரர்களை சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறி, பொது அடையாளங்களை அழிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.