ஆண்டு தோறும் ஜூன் 8-ம் தேதியானது உலக கடல் தினமாக கொண்டாடப்படுகிறது.
பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும்பங்கு வகிக்கிறது, மேலும் கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து தேவைகளும் கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது.
கடல் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்வதோடு, ஆக்சிஜன் எனும் உயிர் வாயுவை உற்பத்தி செய்தும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்களையும் வழங்குகிறது. மேலும், காலநிலை மாற்றங்களைச் சீரமைக்க பேருதவியாக உள்ள இப்பெருங்கடல்கள், சில சமூகத்தினரின் வாழ்வாதாரங்களாக அமைந்துள்ளது.
உலகப் பெருங்கடல்கள் நாள் என்பது உலக நாடுகளால் ஆண்டுதோறும் ஜூன் 8 ம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிகழ்வை அனுசரிப்பதனைக் குறித்து 1992 ம் ஆண்டில் பிரேசிலின், ரியோ டி ஜெனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில், முதன் முறையாக கனடா கோரிக்கையை முன்வைத்தது.
அதன்பின்னர், இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஐக்கிய நாடுகள் அவை 2008 ம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது.
அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கடல் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது.