• Fri. Nov 15th, 2024

ஜேர்மனிய அதிபருக்கு செலுத்தப்பட்ட இருவேறு தடுப்பூசிகள்

Jun 22, 2021

ஜேர்மனியின் சான்ஸ்லர் ஏஞ்சலா மேர்கெல் (Angela Merkel) முதல் தடவை அஸ்ட்ராஸெனிகா கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் இரண்டாவது டோஸாக மொடேர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி ஏஞ்சலா மேர்கெலுக்கு ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஸெனிகா (AstraZeneca), கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் 2 ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசியாக அமெரிக்காவின் மொடேர்னா (Moderna) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஜேர்மனிய அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர், ஏஞ்சலா மேர்கெலுக்கு இத்தடுப்பூசி செலுத்தப்பட்டது எனவும் ஜேர்மனிய அரசாங்கப் பேச்சாளர் கூறியுள்ளார்.