• Thu. Mar 28th, 2024

இலண்டன் பல்கலைக்கழகத்தின் முத்தமிழ் விழா 2022

Feb 26, 2022

இலண்டன் பல்கலைக்கழகம் SOAS ல் தமிழ்த்துறை மீள் உருவாக்கத்திற்கான முத்தமிழ் விழா 2022 அழகான இனிமையான நிகழ்வுகளுடன் பிப்ரவரி மாதம் இருபதாம் நாள் (20.02.2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் ஆர்வலர்கள், அரசியல் முகவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கலை இரசிகர்கள் பங்கு பற்றி இருந்தார்கள்.

இயல், இசை, நாடகம் எனப் பல சிறப்பான நிகழ்வுகள் இடம்பெற்றன. ஐக்கிய இராச்சியத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் தமிழ்ப்பாடசாலைகளிலிருந்து நிகழ்வுகள் இங்கே அரங்கேறின; அந்த வகையில் பின்வரும் பாடசாலைகள் இணைந்திருந்தன.
இலண்டன் தமிழ் நிலைய தமிழ்ப்பாடசாலை, கரோ தமிழ் பாடசாலை, லிவர்பூல் தமிழ் கல்விக்கூடம், அல்பெர்ட்டன் OFAAL தமிழ் பாடசாலை, சட்பறி தமிழ் பாடசாலை, நாட்டிய சேத்திரா நடனப் பாடசாலை ஆகியவை.

மாணவர்களின் நிகழ்வுகளைச் சிறப்பான முறையில் நிகழ்த்திய தமிழ்ப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் பாரட்டப்பட வேண்டியவர்களே.

இந்த நிகழ்வு சிறப்புற அமைய பல்வேறு நிறுவனங்கள் அனுசரணை மற்றும் இணை அனுசரணை வழங்கியிருந்தார்கள்.

மற்றும் இந்த நிகழ்வுக்கு IBC தமிழ் தமிழ்4, வணக்கம் இலண்டன், ஆகியன ஊடக அனுசரணை வழங்கியிருந்தன. இந்த நிகழ்வினை அழகு தமிழில் எம் இளையோர் திருமதி அஞ்சு ராமதாஸ்
செல்வி அர்ச்சனா இலங்கைநாதன் ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தார்கள். Baba Luxy நிழல் படங்களை எடுத்திருந்தார். அனைவரும் பாராட்டுக்குரியவர்களாவர்.

இவ்விழாவின் மூலம் தமிழ்த்துறைக்கு சேகரிக்கப்பட்ட £6100 நிதி தமிழ்த்துறை தலைமை ஒருங்கிணைப்பாளரிடம் கையளிக்கப்பட்டது. இலண்டன் பல்கலைக்கழகத்தில் விரைவில் தமிழ்த்துறை மீட்டுருவாக்கம் செய்ய வாழ்த்துகிறோம்.