• Thu. Apr 18th, 2024

சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி

Jun 7, 2021

சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு சீன நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை உலகுக்கு அளித்துள்ள சீனாவில், 3 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

சீன நிறுவனமான சைனோவேக் உருவாக்யுள்ள இந்த தடுப்பூசிக்கு கொரோனாவேக் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிக்கு சீன நிர்வாகம் தனது அங்கீகாரத்தை அளித்து இருக்கிறது.

இந்த தடுப்பூசியை 2 கட்டங்களாக 3-17 வயதுள்ள நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுக்கு செலுத்தி சைனோவேக் நிறுவனம் பரிசோதித்து உள்ளது. அதில் இந்த தடுப்பூசி நம்பகமானது, செயல்திறன் மிக்கது என்று தெரிய வந்துள்ளது.

சீன மத்திய டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை சைனோவேக் நிறுவனத்தின் தலைவர் யின் வெய்டாங் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.