
ஸ்பெயினில் எரிமலை வெடித்துச் சிதறியதில், எரிமலைக் குழும்பு தொடர்ந்து வெளியேறி வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 19 ஆம் திகதி லா பால்மா தீவில் உள்ள எரிமலை வெடித்துச் சிதறியது.
சில நாட்கள் அமைதி காத்த எரிமலை, 9 நாட்களின் பின்னர் நேற்று மீண்டும் லாவா என்னும் எரிமலைக் குழம்பை வெளியிட ஆரம்பித்துள்ளது.
இந்த எரிமலைக் குழம்பு ஆறு போல ஓடி அந்திலாந்திக் கடலை நோக்கிச் செல்ல ஆர்மபித்துள்ளது. ஆனால் கடலை எப்போது சென்றடையும் என கூறமுடியாது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
லாவா ஓடிய பாதையில் இருந்த 600 க்கும் அதிகமான வீடுகள், வாழைத்தோட்டங்கள், வழிப்பாட்டு தலங்கள் கடுமையாக சேதமடைந்தன.
இந்நிலையில், முதல்கட்டமாக 10.5 மில்லியன் யுரோவை நிவாரண நிதியாக ஸ்பெயின் அரசு விடுவித்துள்ளது.
நேஷனல் ஜியோகிராஃபிக் இன்ஸ்டிடியூட் எரிமலை வெடித்த பகுதியில் ஆறு பூகம்பங்களைக் கண்டறிந்துள்ளது.
எனினும் இதுவரை உயிரிழப்புகள் அல்லது பலத்த காயங்கள் குறித்த எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளது.
மேலும் பெரும் அளவு சாம்பல் புகை காரணமாக நான்காவது நாளாக லா பால்மா விமான நிலையத்திற்குள் அல்லது வெளியே எந்த விமானங்களும் செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.