இனப்படுகொலையை தடுக்கவே உக்ரைன் மீதான போர் நடவடிக்கை என ரஷ்ய அதிபர் புதின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
உக்ரைன் வசம் இருந்த கிரிமியாவை போர் மூலம் ரஷ்யா இணைத்துக் கொண்டதன் 8வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், லுஷ்னிகி மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது
இதில் பங்கேற்று பேசிய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் போரில் பங்கேற்றுள்ள ரஷ்ய ராணுவ வீரர்களை பாராட்டினார். உக்ரைனில் உள்ள தனது எதிரிகளை நவ நாஜிக்கள் என்றும் விமர்சித்தார்.
அங்கு நடைபெறும் இனப்படுகொலையை தடுக்க உக்ரைன் மீதான போர் நடவடிக்கை அவசியம் எனவும் புதின் தெரிவித்தார். இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில், ரஷ்ய தேசபக்தி பாடல்கள் இடம் பெற்ற பின்னர் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.