• Fri. Jul 26th, 2024

பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை

Dec 13, 2021

பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்தால் ஜனவரியில் பெரிய கொரோனா அலை ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

தடுப்பூசிகள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைப் பொறுத்து ஏப்ரல் இறுதிக்குள் இந்த திரிபால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 25,000 முதல் 75,000 வரை மாறுபடலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், ஒமிக்ரோனா வைரஸ் வகை தொடர்பான விடயத்தில், இன்னும் நிச்சயமற்ற தன்மையே நிலவுவதாக இந்த ஆய்வின் பின்னணியிலுள்ள வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிரித்தானியாவில் புதிதாக 54 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 633 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்றியுள்ளது.

இதேவேளை, இங்கிலாந்தில், இன்று முதல் 30 வயதும் அதற்கும் மேற்பட்டோரும் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது