• Mon. Oct 2nd, 2023

கனடாவின் புதிய அமைச்சரவையில் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த பெண்

Oct 27, 2021

கனடாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக தமிழக வம்சாவளியை சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று மூன்றாவது முறையாக ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் புதிய அமைச்சரவை அமைக்கும் பணிகள் நடைபெற்ற நிலையில் புதிய அமைச்சரவையின் பாதுகாப்பு துறை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது தந்தை எஸ்.வி.ஆனந்த் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.