
உக்ரேனியப் படைகள் திங்களன்று நகரின் முழுக் கட்டுப்பாட்டையும் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளதாக கியூவின் வடமேற்கு நகரமான இர்பின் மேயர் தெரிவித்தார்.
தலைநகருக்கு வெளியே வெறும் 20 கிமீ (12 மைல்) தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம், கியூவின் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான சண்டைகளைக் கண்டுள்ளது.
இன்று எங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது, “ரஷ்யாவிடம் இருந்து இர்பின் விடுவிக்கப்பட்டது” என மேயர் ஒலெக்சாண்டர் மார்குஷின் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பதிவில் கூறினார்.
எங்கள் நகரம் மீது மேலும் தாக்குதல்கள் இருக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், நாங்கள் அதை தைரியமாக பாதுகாப்போம் என்றும் அவர் மேலும் கூறினார்.