• Thu. Nov 21st, 2024

நவராத்திரி தின வழிபாடுகளும் பலன்களும்

Oct 7, 2021

நவராத்திரி தினங்களில் தேவிக்கு அலங்காரங்கள் என்ன, நவராத்திரி தினங்களின் ஒவ்வொரு நாளுக்கான பெருமைகள் என்ன, நாம் எப்படி அன்னையை வணங்க வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்…

இந்துக்கள் கொண்டாடும் பிரபலமான பண்டிகைகளில், நவராத்திரி மிக பிரம்மாண்டமான ஒன்றாகும். நவராத்திரி திருவிழா கொண்டாடுவதற்கும் பல கொள்கைகள் இருக்கிறது. ஒரு விதத்தில் , நவராத்திரி திருவிழா கொண்டாடுவதால் நம் ஆன்மீக ஆற்றல்கள் வெளிப்படுகிறது.

நம் ஆன்மிக பயணத்தில் துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய மூவரின் கோட்பாடுகளை நாம் கடந்து செல்கிறோம்.அதாவது கல்வி,செல்வம்,வீரம் இவை மூன்றும் அனைவரின் வாழ்விலும் மிக முக்கியமான விஷயமாகும்.இந்த உலகில் ஒருவரின் ஒருவர் சுயத்தை உணர இது அவசியம் தேவைப்படுகிறது.

‘ஒன்பது இரவுகள்’ என்று பொருள்படும் நவராத்திரி, துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி வடிவங்களில் தெய்வீக வழிபாட்டை ஒவ்வொரு மூன்று நாட்களும் வழிபடுகிறார்கள். இருப்பினும், பத்தாவது நாள் மிக முக்கியமான நாளாகும். இது ‘வெற்றியின் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை விஜயதாசமி என்று அழைக்கப்படுகிறது.

துர்கா,லட்சுமி,சரஸ்வதி ஆகிய மூவரையும் இவ்வுலகில் வழிபடக் காரணம்,அனைத்து எதிர்மறை எண்ணங்களை அழித்து நேர்மறை குணங்களை வளர்க்கும் பண்புகளும்,நற்குணங்களும் இம்மூவரிடம் இருக்கிறது.அதனை இவ்வுலகில் வேரூன்றவே நாம் அவர்களை வணங்குகிறோம்.

நம்மால் சிவன் என்னும் பெரும் சக்தியை இம்மூன்று சக்திகளின் அருள் இருந்தால் மட்டுமே உணர முடியும் என்று கூறப்படுகிறது. அதனால்தான், தேவி என்று அழைக்கப்படும் மகா சக்தியை மக்கள் அவரது பல்வேறு வெளிப்பாடுகளில் வணங்குகிறார்கள்.

ஆன்மீக முன்னேற்றத்தின் வெவ்வேறு கட்டங்கள் நவராத்திரி கொண்டாட்டங்களின் பிரதிபலிக்கின்றன. முதல் மூன்று நாட்கள், துர்காவை வழிபடுகிறோம்,அவள் சக்தியின் அம்சம் ஆவாள், இது நம் மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை அழித்து நமது புலன்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் செயல்முறைக்கு ஒத்ததாகும், எனவே புராணங்களில் உள்ள கதைகளில் தேவியை துர்கா வடிவத்தில் போரை நடத்துவதையும் அசுரர்களை அழிப்பதையும் அடையாளமாகச் சித்தரிக்கின்றனர்.

நம் முற்பிறவி கர்மாக்கள் நம்மை பின் தொடரும்,அந்த கர்மாக்கள் நமக்கு நன்மையும் கொடுக்கும்,தீமையையும் கொடுக்கும்.இது அவரவர் வினைகளை பொறுத்தது. எனவே, நாம் அவற்றை நேர்மறையான குணங்களுடன் மாற்ற வேண்டும். பகவத் கீதையில் இந்த குணங்களை டைவி-சம்பத் என்று குறிப்பிடுகிறார்கள், அதாவது “தெய்வீக செல்வம்”.என்று கூறுவார்கள்.நம் வாழ்க்கையில் தைரியம் எவ்வளவு முக்கியமோ அதே போன்று தான் செல்வமும். அதற்காக அடுத்த மூன்று நாட்களில் லட்சுமியை நாம் வணங்குகிறோம்.

லட்சுமி என்பது மொத்த செல்வம், மற்றும் செழிப்பின் அடையாளம் ஆவாள். நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் அறிவின் உருவமான சரஸ்வதியை வணங்குவதற்காக அர்ப்பணிக்கப்படுகிறது அவள் ஒரு சுத்தமான வெள்ளை புடவை அணிந்திருப்பதாக சித்தரிக்கப்படுகிறாள், இது உச்ச சத்தியத்தின் வெளிச்சத்தை குறிக்கிறது.

பத்தாவது நாள் விஜயதசமி திருவிழா கொண்டாடப்படுகிறது. இது வெற்றியின் அடையாளமான திருவிழாவாகும்.

ஆகவே, வழிபாட்டின் ஒவ்வொரு கட்டத்தின் முக்கியத்துவமும் தெளிவான விளக்கத்தை தருகிறது. முதலாவதாக, எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும்; இரண்டாவதாக, நல்லொழுக்கங்கள் வேரூன்ற வேண்டும்; , தேவையான மன தூய்மையைப் பெற்ற பிறகு, மூன்றாவதாக ஆன்மீக அறிவைப் பெற வேண்டும். அப்போதுதான் சாதக (ஆன்மீக ஆர்வலர்) ஆன்மீக வெளிச்சத்தை அடைவர்.

துறவம் மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு விஜய தசமி தினம் ஒரு புனித தினமாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது; மேம்பட்ட ஆன்மீக ஆர்வலர்கள் இந்த நாளில் சன்னியாசத்தை (துறவறத்தின் சபதம்) தொடங்குகிறார்கள்.

​நவராத்திரி வழிபாடு தரும் பலன்கள்

நவராத்திரி என்பது ஆன்மீக ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல; இது சதாரண மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை மேற்கொள்ளுவதற்கான பாடத்தைக் கற்பிக்கிறது.ஒரு மனிதன் வாழ்வின் தடைகளை தாண்டி வெற்றி பெற தைரியத்தின் அடையாளமான துர்கையை வழிபட வேண்டும்.அதே போன்று வாழ்வில் அமைதியையும் செழிப்பையும் பெற லட்சுமியை பிரார்த்தனைச் செய்ய வேண்டும்.

மேலும் அறிவைப் பெறுவதற்காக சரஸ்வதியை வணங்க வேண்டும். இந்த மூன்றும் ஒரு முழுமையான உலக வாழ்க்கைக்கு அவசியமானவை. உண்மையில், நாம் இவ்வாறு வணங்கும் போது நமக்குள் இருக்கும் சக்தி தூண்டப்படுகிறது.

துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி வெவ்வேறு தெய்வங்கள் அல்ல, அவர்கள் ஒருமை தெய்வீகத்தின் வெவ்வேறு அம்சங்களாக திகழ்பவர்கள். நவராத்திரியுடன் தொடர்புடைய சில ஆன்மீக நடைமுறைகள் இருக்கிறது.அதாவது விரதம் இருத்தல்,அம்மனுக்குரிய பாடல்களை பாடுதல், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் கூறுதல் போன்றவை இதில் அடங்கும்.

ஒன்பதாம் நாள் ஆயுத பூஜை நாள் என்று கூறுவார்கள். அயூத பூஜை என்பது ஒருவரின் வாழ்வாதாரத்திற்காக ஒருவர் பயன்படுத்தக்கூடிய கருவிகளை வழிபடுவது தான் ஆயுத பூஜையின் சிறப்பு.

அனைவரும் இந்நாளில் தங்கள் கருவிகளை தெய்வத்தின் பலிபீடத்தின் முன் வைத்து வணங்குவர். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒருவரது வேலையைத் தொடங்குவதற்கு முன்பு தான் பயன்படுத்தும் கருவிகளுக்கு முன்பாக சிரம் பணிந்து தொடங்குவது வழக்கம்; இது ஒருவரின் கடமைகளை நிறைவேற்ற உதவியதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாகும்.

குழந்தைகள் இந்நாளில் தங்கள் படிப்பு புத்தகங்களையும் எழுதும் கருவிகளையும் பலிபீடத்தின் மீது வைத்து வணங்குவார்கள். இந்த நாளில், எந்த வேலையும் படிப்பும் செய்யப்படுவதில்லை.

​சரஸ்வதி பூஜை மற்றும் வித்தியாரம்பம்

பத்தாம் நாள் விஜய தசமி என்று அழைக்கப்படுகிறது. சரஸ்வதியின் ஆசீர்வாதங்களைப் பெற பக்தர்கள் சரஸ்வதி பூஜை (வித்யாரம்பம்) செய்கிறார்கள். மஹிஷாசுரன் என்ற அரக்கனை வென்றதற்காக சில பக்தர்கள் துர்காவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பூஜைகளையும் செய்கிறார்கள்.

வித்யாரம்பம் என்பது அறிவாற்றலை பெறுவதற்கு தொடங்கும் நாளாகும் மற்றூம் சிறு குழத்தைகள் கல்வி கற்க இந்நாளில் தான் ஆரம்பிப்பார்கள். நாம் எப்போதும் ஒரு தொடக்க மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும்.”என்பதற்காக இந்நாளைக் கொண்டாடுகிறோம்.

தபேலா, ஹார்மோனியம், வீனை, வயலின் போன்ற இசை கருவிகளைப் பற்றிய முதல் பாடங்களைத் தொடங்க இது ஒரு நல்ல நாள்.

மற்றொரு மட்டத்தில், ராமாயணத்தால் தெளிவுபடுத்தப்பட்ட கொள்கைகளையும் நவராத்திரி எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவில் விஜயதசமியை, தசரா என்று அழைப்பார்கள்.