• Fri. Jul 26th, 2024

100 ஆண்டுகளுக்கு மேல் புதைந்திருந்த சிவன் கோயில் – நந்தியின் சிறப்பு

Jun 12, 2021

இந்தியா – பெங்களூரின் முக்கியமான மல்லேஸ்வரத்தில் சுமார் 15-20 ஆண்டுகளுக்கு முன்பு மண் மேடு போல் இருந்த இடத்தை அபார்ட்மெண்ட் கட்டுவதற்காக தோண்டினால், பிரம்மாண்ட கல் குளம் புதைந்து இருந்ததை கண்டு பிடித்தார்கள்.

அந்த குளத்தருகில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவனுக்கு நேர் எதிரே இருக்க வேண்டிய நந்தி, வழக்கத்துக்கு மாறாக சிவலிங்கத்துக்கு செங்குத்தாக நந்தி சிலை இருந்தது. அந்த நந்தியின் வாயில் இருந்த மண் அழுக்கு அகற்றிய உடன், வாயில் இருந்து ஜலம் சிவலிங்கத்தின் மேல் கொட்ட ஆரம்பித்தது.

இந்த குளம் சிவலிங்கத்தின் மேல் அபிஷேகமாக நந்தி வாயில் இருந்து ஜலம் கொட்டுவதை போல் கட்டப்பட்டுள்ளது.

சுமார் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த தக்ஷிண முக நந்தி கல்யாணி கோயிலில் எப்படி கீழே இருக்கும் குளத்தில் இருந்து மேலே இருக்குற நந்தியின் வாய் வரை எந்த மோட்டார் பம்ப் இல்லாமல் தண்ணீர் போகிறது என்பது ஆச்சர்யம் அளிக்கும் விஷயமாக உள்ளது.

இன்று வரை நந்தி வாயிலிருந்து சிவலிங்கத்தின் மேல் ஜலம் கொட்டிய படியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.