• Sat. Apr 20th, 2024

எந்தெந்த பொருட்களைக் கடன் வாங்க கூடாது!

Jul 8, 2021

கடன் வாங்குவது என்பது எந்த காலத்திலும் தவறானதாக கூறப்படுவதில்லை. ஆனால் எந்த பொருளை கடன் வாங்குகிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

சில பொருட்களை கடன் வாங்குவதின் மூலம், அவை நமது வாழ்வில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த பொருட்களை பிறரிடம் இருந்து வாங்குவது அல்லது அவர்களுக்கு தெரியாமல் எடுப்பது என்பது, கெட்ட நேரத்தை உங்களை நோக்கி அழைத்துவரும்.

மற்றவர்களின் கடிகாரத்தை ஒருபோதும் இரவல் வாங்கி கட்டாதீர்கள். ஏனெனில் அடுத்தவர்களின் கடிகாரத்தை கடன் வாங்கி கட்டுவது உங்கள் வாழ்க்கையில் வறுமையையும், தோல்வியையும் ஏற்படுத்தும்.

அதே போல ஒருவரிடம் பேனா வாங்கிவிட்டு அதனை திரும்ப கொடுக்காவிட்டால் அது உங்களின் வாழ்க்கையில் வறுமையையும்,
அவமானத்தையும் ஏற்படுத்தும்.

உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களிடம் கூட ஆடைகளை பகிர்ந்து கொள்ளாதீர்கள். இவை பொருளாதார பிரச்சினைகளை
உண்டாக்கும்.

குளிக்கும் சோப்பில் அதிகளவு பாக்டீரியாக்கள் இருக்கும். இதனை ஒருபோதும் மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது.

காதணிகள் மற்றும் ஹெட்போன்களை பகிர்ந்து கொள்வது காதுகளில் அதிக பாக்டீரியாக்களை பரப்பும். இதனை பகிர்ந்து கொள்ளும்போது அது மற்றவருக்கு அதிக பாதிப்புகளை உண்டாக்கும்.