• Tue. Mar 26th, 2024

ஜூனியர் உலக கோப்பை இறுதிப்போட்டி; டாஸ் வென்ற இங்கிலாந்து

Feb 5, 2022

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது.

இதில் ஆன்டிகுவாவில் இன்று நடைபெறும் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டாவையும், கால்இறுதியில் வங்காளதேசத்தையும், அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

டாம் பிரிஸ்ட் தலைமையிலான இங்கிலாந்து அணி லீக் சுற்றில் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், கனடாவையும், கால்இறுதியில் தென்ஆப்பிரிக்காவையும், அரைஇறுதியில் ஆப்கானிஸ்தானையும் பதம் பார்த்து தோல்வியே சந்திக்காமல் இறுதி சுற்றை எட்டியிருக்கிறது.

இந்த நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

இரு அணி வீரர்களின் பட்டியல்,

இந்தியா: அங்க்ரிஸ் ரகுவன்ஷி, ஹர்னூர் சிங், ஷேக் ரஷீத், யாஷ் துல் (கேப்டன்), ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர், நிஷாந்த் சிந்து, தினேஷ் பானா, கவ்ஷல் தாம்பே, ராஜ் பாவா, விக்கி ஆஸ்ட்வால், ரவிகுமார்.

இங்கிலாந்து: ஜார்ஜ் தாமஸ், ஜேக்கப் பெத்தேல், டாம் பிரிஸ்ட் (கேப்டன்), ஜேம்ஸ் ரீவ், வில்லியம் லக்ஸ்டன், ஜார்ஜ் பெல், ரீஹன் அகமது, அலெக்ஸ் ஹார்டன், ஜேம்ஸ் சேல்ஸ், தாமஸ் ஆஸ்பின்வால், ஜோஷ்வா பாய்டென்.

அனல் பறக்கும் இந்த போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.