• Thu. Nov 21st, 2024

உக்ரைன் மக்களை ரஷிய வீரர்கள் இழிவுபடுத்தினர்- வீராங்கனை குற்றச்சாட்டு

Mar 5, 2022

போரில் உக்ரைன் மக்கள் சந்திக்கும் துயரங்களை கூறி சில ரஷிய டென்னிஸ் வீரர்கள் சிரித்ததாக உக்ரைனில் பிறந்த வீராங்கனை கூறி உள்ளார்.

உக்ரைன் மக்களை ரஷிய டென்னிஸ் வீரர்கள் இழிவுபடுத்தினர்- வீராங்கனை குற்றச்சாட்டு

போரில் உக்ரைன் மகக்ள் சந்திக்கும் துயரங்களை சில ரஷிய டென்னிஸ் வீரர்கள் கேலி செய்வதாக உக்ரைனில் பிறந்த டென்னிஸ் வீராங்கனை எவா லிஸ் குற்றம்சாட்டினார்.

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஜெர்மனிக்காக விளையாடி வருகிறார் எவா லிஸ்.

இந்நிலையில், கஜகஸ்தானில் நடைபெற்ற டென்னிஸ் தொடரில் பங்கேற்ற ரஷிய வீரர்கள் சிலர், உக்ரைன் மக்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும், போரில் உக்ரைன் மக்கள் சந்திக்கும் துயரங்களை கூறி சிரித்ததாகவும் கூறி உள்ளார்.

தனது சொந்த நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போட்டியின் போது தனது நாட்டு கொடியின் வண்ணங்களை அணிய தேர்ந்தெடுத்தபோது, தன்னை மிகவும் இழிவாக பார்த்ததாக எவா லிஸ் கூறினார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ரஷிய அணிகளை தடை செய்வதற்கான முடிவை எவா லிஸ் ஆதரிக்கிறார்.

அதேசமயம், தனிநபர்கள் போட்டிகளில் பங்கேற்பதை தடை செய்யக்கூடாது என்கிறார்.