• Wed. Oct 30th, 2024

டோக்கியோ ஒலிம்பிக் – ஹாக்கியில் குழு சுற்று போட்டியில் இந்தியா வெற்றி!

Jul 24, 2021

டோக்கியோவில் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் ஹாக்கியில் குழு சுற்று போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று குழு சுற்று ஹாக்கி போட்டிகள் தொடங்கிய நிலையில் இந்தியா – நியூஸிலாந்து இடையே குழு ஏ-வுக்கான தகுதி சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியுள்ளது.

அதேபோல ஆர்ச்சரி மிக்ஸ்டு டீம் எலிமினேஷன் சுற்றில் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ் கூட்டணி 5 பாயிண்டுகளை பெற்று வெற்றி பெற்றதுடன் 3 பாயிண்ட்களில் சீனாவை தோற்கடித்துள்ளது.