• Thu. Nov 21st, 2024

தாலிபான்களால் இந்தியாவிற்கான ஏற்றுமதி இறக்குமதி நிறுத்தம்

Aug 20, 2021

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் இந்தியாவுடனான வர்த்தகம் முடங்கியுள்ளதாக இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் தலீபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். இதை தொடர்ந்து அங்கு நிலையான ஆட்சி அமைவது குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது தலீபான்கள் பாகிஸ்தானுடனான அனைத்து போக்குவரத்தையும் நிறுத்தி வைத்துள்ளன.

ஆப்கானிஸ்தானிலிருந்து ஏற்றுமதியாகும் உணவு பொருட்கள் பாகிஸ்தான் வழியாக இந்தியாவை வந்தடையும் நிலையில் இந்த தடையால் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் பேரீட்சை உள்ளிட்ட உலர் பழங்களின் விலை உள்ளூர் சந்தையில் அதிகரிக்கலாம் என இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.