சிரேஷ்ட சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான திருமதி. கௌரி சங்கரி தவராசா திடீர் உடல்நலக் குறைவால் இன்றையதினம்(23) உயிரிழந்துள்ளார்.
கௌரி சங்கரி தவராசா தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான K.V. தவராசாவின் மனைவியுமாவார்.
அத்துடன் இவர் குற்றவியல் வழக்கறிஞராக செயற்பட்டு வந்தார்.
நாட்டின் முக்கியமான வழக்குகளிலும், சர்வதேச அளவில் பேசப்படும் வழக்குகளிலும் கௌரி சங்கரி தவராசா முன்னிலையாகியிருந்தவர் என்பதுடன், மனித உரிமை செயற்பாட்டாளராகவும் இவர் அறியப்படுகின்றார்.
இவர் இறுதியாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு சார்பாக வழக்கில் வாதாடி வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.