ஆப்கானிஸ்தானில் தாக்குதல் அச்சுறுத்தல்கள் உள்ளதால் இம்மாதத்திற்குள் அங்கிருந்து வெளியேறிவிடுவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது என அந்நாட்டு ஜானாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா நாட்டு படைகளை ஆப்கானிலிருந்து ஆகஸ்ட் 31 க்குள் வெளியேற்றும் நோக்கில் வேகமாகச் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர், அந்த இலக்கை அடைவது புதிய தலிபான் ஆட்சியாளர்களின் ஒப்துழைப்பைப் பொறுத்தது எனவும் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 31 -ஆம் திகதிக்கு பின்னரும் தேவைப்பட்டால் வெளியேறும் காலக்கெடு நீடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 31 -ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து வெளிநாட்டுப் படைகளும் நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும். இல்லையேல் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என தலிபான்கள் எச்சரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பினை அவர் விடுத்துள்ளார்.