இலங்கையில் 30 அகவைக்கும் மேற்பட்ட மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இப்போது முழுமையாக தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்றைய நிலவரப்படி 30 அகவைக்கு மேற்பட்டவர்களில் 60 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கையானது மேலும் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் , தடுப்பூசி பெறாத அனைவரும் அதனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா கோரியுள்ளார்.