அமெரிக்கா பிரிட்டன் அவுஸ்திரேலியா ஆகியநாடுகள் இணைந்து புதிய முத்தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது.
இதனடிப்படையில் அவுஸ்திரேலியாவிற்கு அணுசக்தி நீர்மூழ்கியை வழங்க தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் அவுஸ்திரேலியா அமெரிக்காவிற்கான தனது தூதுவர்களை மீள அழைத்துள்ளது.
இந்நிலையில் சூழ்நிலையின் தீவிரதன்மை இந்த நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றதாக பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மூன்று நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கையை பிரான்சின் முதுகில் குத்திய நடவடிக்கை என தெரிவித்துள்ள பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயே தூதுவர்களை மீள அழைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த நடவடிக்கை கூட்டாளிகள் மற்றும் சகாக்கள் மத்தியிலான ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.
இது எங்கள் கூட்டணி மற்றும் சகாக்கள் மத்தியில் இந்தோ பசுபிக் குறித்த நோக்கினை பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நீர்மூழ்கி விவகாரத்தில் பிரான்சின் ஏமாற்றத்தை புரிந்துகொள்வதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அட்டாக் நீர்மூழ்கி திட்டம் தொடர்பில் தொடர்பில் கலந்தாய்வுகளை மேற்கொள்வதற்காக பிரான்ஸ் தனது அவுஸ்திரேலிய தூதுவரை மீள அழைத்ததை புரிந்துகொள்கின்றோம் எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் எங்களின் தெளிவாக தெரிவிக்கப்பட்ட பாதுகாப்பு கரிசனைகளின் அடிப்படையிலேயே நீர்மூழ்கிக்கு இணங்கியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.