மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிதரன்இ பா. அரியேந்திரன். மட்டு மாநகரசபை மே யர்உட்பட 10 பேருக்கு எதிராக தமி மக்களுக்காய் ஆகுதியன தியாகதீபம் தீலீபனை நினைவுகூர மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் தடைஉத்தரவு பிறப்பித்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
தமி மக்களின் விடிவுக்காய் தன்னையே ஆகுதியாக்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் தீலீபனை நினைவு கூரும் நடவடிக்கையை நேற்று 17 ம்திகதி முதல் எதிர்வரும் 26 ம் திகதிவரை தமிழர் பிரதேசங்களில் நினைவு கூரப்படுகின்றது.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் அவர் சாந்த உறுப்பினர்களாலும் அவர்களால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களாலும் விளக்கேற்றி நினைவு கூரல் நடவடிக்கை இடம்பெற உள்ளதாக பொலிஸ் நிலைய புலனாய்வு உத்தியோகத்தர்களால் நம்பகரமான தகவல் கிடைத்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இவ்வாறன நிகழ்வு நடந்தால் இதற்கு எதிரானவர்களால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவாய்ப்பு இருப்பதனால் மற்றும் நாட்டில் தற்போது கொரோனா நோய் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இவ்வாறான நினைவு கூரல் நடவடிக்கையை நடைபெறாமல் தடை உத்தரவு ஒன்றை பிரசுரிக்குமாறு மன்றிற்கு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மன்றிற்கு அறிக்கை செய்தார்.
இதன் பிரகாரம் பொலிசார் கோரியவாறு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் நீதிமன்ற கட்டளைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று பொலிசார் வழங்கிவருவதாகவும் மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.