தமிழகத்தின் பல இடங்களில் இன்று(27) திடீரென கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகின்றது.
இந்தியாவின் மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிய வேளாண் சட்டங்களை இயற்றியதை அடுத்து டெல்லியில் கடந்த 300 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(27) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் காரணமாக டெல்லி எல்லையில் போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டது.
மேலும் தமிழகத்தின் பல இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்படுவதோடு ஒரு சில இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.