பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியீட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
இந்நிலையில் நவம்பர் 1 ம் தேதி முதலாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:
- நோய்த் தொற்று ஏற்படாத வகையில் வகுப்பறைகள் என பள்ளியில் உள்ள அனைத்து இடங்களையும் கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
- ஒவ்வொரு பள்ளியிலும் தேவையான அளவு முகக்கவசம் இருப்பதையும், போதுமான அளவு கிருமி நாசினி இருப்பதையும் உறுதி செய்திட வேண்டும்.
- வகுப்பறையில் தனிமனித இடைவெளியுடன் மாணவர்கள் அமரும் வகையில் இடவசதி இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
- பாடவேளையின் இடைவேளை மற்றும் மதிய உணவு இடைவேளையின் போது ஆசிரியர்கள் முழு கவனத்துடன் மாணவர்களை கண்காணிக்க வேண்டும்.
- நடமாடும் மருத்துவக்குழு, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செவிலியரின் தொலைபேசி எண்கள் பள்ளியின் அறிவிப்பு பலகையில் எழுதப்பட்ட வேண்டும்.
- அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்திட வேண்டும்.
- நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கு பெற இருப்பதால், அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்த வேண்டும்.