நவம்பர் 30 கிரிகோரியன் ஆண்டின் 334 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 335 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 31 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்
977 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் ஒட்டோ பாரிசு மீதான முற்றுகையை நிறுத்தி, பின்வாங்கினார்.
1700 – சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு தலைமையில் 8,500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் உருசியப் படைகளை வென்றனர்.
1718 – நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்லசு இறந்தார்.
1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பாரிசு உடன்படிக்கை: அமெரிக்காவிற்கும் மற்றும் பெரிய பிரித்தானியாவுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிசில் கையெழுத்திடப்பட்டது.
1786 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் லியோப்பால்டின் தலைமையிலான டசுக்கனி மரணதண்டனையை இல்லாதொழித்த முதலாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது.
1803 – எசுப்பானிய அமெரிக்கா, மற்றும் பிலிப்பீன்சில் பெரியம்மைக்கு எதிரான தடுப்பூசி இடுவதற்கான மூன்றாண்டுத் திட்டத்துக்கான பயணம் பால்மீசு என்ற மருத்துவர் தலைமையில் எசுப்பானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
1803 – லூசியானா வாங்கல்: எசுப்பானியா லூசியானாவை பிரான்சுக்கு அதிகாரபூர்வமாகக் கையளித்தது. 20 நாட்களின் பின்னர் பிரான்சு இப்பிரதேசத்தை ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்றது.
1806 – நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றின.
1853 – கிரிமியப் போர்: உருசியப் பேரரசின் கடற்படை வடக்கு துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில் உதுமானியரின் படைகளைத் தோற்கடித்தன.
1872 – முதலாவது பன்னாட்டுக் காற்பந்துப் போட்டி கிளாஸ்கோவில் இசுக்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது.
1908 – பென்சில்வேனியாவில் மரியான்னா என்ற இடத்தில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 154 பேர் கொல்லப்பட்டனர்.
1917 – முதலாம் உலகப் போர்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். ஐயாத்துரை என்ற லான்ஸ் கோப்ரல் போரில் ஈடுபட்டு இறந்தார்.
1936 – இலண்டனில் பளிங்கு அரண்மனை தீப்பற்றி எரிந்து அழிந்தது.
1939 – பனிக்காலப் போர்: சோவியத் படைகள் பின்லாந்தை முற்றுகையிட்டு எல்சிங்கி மீது குண்டுகளை வீசீன.
1947 – பலத்தீன் உள்நாட்டுப் போர் ஆரம்பம். இது இசுரேல் என்ற நாட்டை உருவாக்க வழி வகுத்தது.
1954 – அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தில் சிலக்கோகா என்ற இடத்தில் விண்வீழ்கல் ஒன்று வீடு ஒன்றில் வீழ்ந்ததில் ஒரு பெண் கொல்லப்பட்டார்.
1962 – பர்மாவைச் சேர்ந்த யூ தாண்ட் ஐக்கிய நாடுகள் சபையின் 3வது பொதுச் செயலராகத் தெரிவானார்.
1966 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பார்படோசு விடுதலை பெற்றது.
1967 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து தெற்கு யேமன் விடுதலை பெற்றது.
1967 – சுல்பிகார் அலி பூட்டோ பாக்கித்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.
1971 – ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தின் டன்பு என்ற இரண்டு தீவுகளைக் கைப்பற்றியது.
1981 – பனிப்போர்: ஜெனீவாவில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் பிரதிநிதிகள் ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள நடுத்தர அணுவாயுத ஏவுகணைகளைக் குறைக்க பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.
1995 – அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளின்டன் வட அயர்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு வட அயர்லாந்து அமைதிப் பேச்சுக்களுக்கு ஆதரவாக உரையாற்றி, தீவிரவாதிகளை அவர் “நேற்றைய மனிதர்” எனக் கூறினார்.
1995 – வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.
2000 – நாசா தனது 101-வது விண்ணோடத் திட்டத்தை ஆரம்பித்தது.
2012 – கொங்கோ குடியரசு, பிராசவில்லி நகரில் சரக்கு வானூர்தி ஒன்று நகரக் குடியிருப்புகளின் மீது வீழ்ந்ததில் 32 பேர் உயிரிழந்தனர்.