• Fri. Nov 22nd, 2024

வரலாற்றில் இன்று டிசம்பர் 3

Dec 3, 2021

டிசம்பர் 3 கிரிகோரியன் ஆண்டின் 337 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 338 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 28 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

915 – இத்தாலியின் முதலாம் பெரிங்கார் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.

1592 – முதலாவது ஆங்கிலேயக் கப்பல் எட்வேர்ட் பொனவென்ச்சர் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது.

1795 – ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

1799 – வீசுலொக் சமரில் ஆஸ்திரியப் படை பிரெஞ்சுப் படைகளை வென்றது.

1800 – மியூனிக்கு அருகில் ஓகன்லிண்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தன.

1818 – இலினொய் அமெரிக்காவின் 21-வது மாநிலமாக இணைந்தது.

1854 – அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் பல்லராட் என்ற இடத்தில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

1903– சேர் என்றி பிளேக் பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக நியமனம் பெற்று கொழும்பு வந்து சேர்ந்தார்.

1904 – வியாழனின் நிலா இமாலியா கலிபோர்னியாவின் லிக் வான்காணகத்தில் சார்ல்சு பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1910 – நவீனகால நியான் ஒளி முதற்தடவையாக பாரிசில் காட்சிப்படுத்தப்பட்டது.

1912 – பால்கன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல்காரியா, கிரேக்கம், மொண்டெனேகுரோ, செர்பியா ஆகியன உதுமானியப் பேரரசுடன் போர் நிறுத்த உடன்பாடு கண்டன. 1913 பெப்ரவரி 3 இல் போர் மீண்டும் தொடங்கியது.

1919 – 20 ஆண்டுகள் கட்டுமானப் பணியின் பின்னர் கியூபெக் பாலம் திறக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் இரு தடவைகள் பாலம் இடிந்து வீழ்ந்து 89 பேர் உயிரிழந்திருந்தனர்.

1927 – முதலாவது லாரல் மற்றும் ஹார்டி திரைப்படம் வெளியிடப்பட்டது.

1944 – கிரேக்கத்தில் ஏதென்சு நகரில் கம்யூனிஸ்டுக்களுக்கும் அரச படைக்கும் இடையில் உள்நாட்டுப் போர் வெடித்தது.

1959 – சிங்கப்பூர் பிரித்தானியப் பேரரசின் கீழ் சுயாட்சி பெற்று ஆறு மாதத்தின் பின்னர் சிங்கப்பூரின் தற்போதைய கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1967 – தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் கிறித்தியான் பார்னார்டு தலைமையில் உலகின் முதலாவது இதய மாற்று அறுவை சிகிச்சை 53 வயது லூயிசு வாசுகான்சுக்கி என்பவர் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

1971 – 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தான் செங்கிசுகான் நடவடிக்கை என்ற பெயரில் இந்தியா மீது போர் தொடுத்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் முழுமையான போர் வெடித்தது.

1973 – வியாழனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.

1976 – ரெகே பாடகர் பொப் மார்லி இரு தடவைகள் சுடப்பட்டுக் காயமடைந்தார். ஆனாலும் இவர் இரு நாட்களின் பின்னர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

1978 – வர்ஜீனியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டு 60 பேர் காயமடைந்தனர்.

1979 – அயத்தொல்லா ரூகொல்லா கொமெய்னி இரானின் உயர் தலைவரானார்.

1984 – போபால் பேரழிவு: இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.

1989 – பனிப்போர்: மால்ட்டாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ், சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் ஆகியோர் பனிப்போர் முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக அறிவித்தனர்.

1992 – 80,000 தொன் பாறை எண்ணெயுடன் சென்ற கிரேக்கக் கப்பல் எசுப்பானியா அருகில் மூழ்கியதில் எண்ணெய் முழுவதும் கடலில் கசிந்தது.

1992 – உலகின் முதலாவது குறுஞ்செய்தி தனி மேசைக் கணினியில் இருந்து வோடபோன் தொலைபேசி ஒன்றுக்கு அனுப்பப்பட்டது.

1994 – பிளேஸ்டேசன் சப்பானில் வெளியிடப்பட்டது.

1997 – நிலக் கண்ணிவெடிகளைத் தயாரிப்பது, மற்றும் பயன்படுத்துவதத் தடை செய்யும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா, உருசியா, சீனா தவிர்ந்த 121 நாடுகள் ஒட்டாவாவில் கையெழுத்திட்டன.

1999 – செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்ட மார்சு தரையிறங்கியின் தொடர்புகளை நாசா நிறுவனம் அவ்விண்கலம் செவ்வாயின் வளிமண்டலத்தை அணுகிய போது இழந்தது.

2007 – இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.

2009 – சோமாலியா, முக்தீசூவில் உணவு விடுதி ஒன்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் மூன்று அமைச்சர்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர்.

2012 – பிலிப்பீன்சில் போபா சூறாவளி தாக்கியதில் 475 பேர் உயிரிழந்தனர்.

2014 – சப்பான் (162173) 1999 ஜேயூ3 என்ற சிறுகோளை நோக்கி ஆறு-ஆண்டுகள் திட்டமாக ஹயபுசா 2 என்ற விண்கலத்தை தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ஏவியது.