அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பன்னாட்டளவில் நடாத்தப்படும் பொதுத்தேர்வு நேற்று(12) பல்வேறு நாடுகளில் சிறப்பாக நடைபெற்றது.
இத்தேர்வில் தமிழ்க் கல்விக் கழகம் – ஜேர்மனியின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் தாய்மொழியைப் பயிலும் 4500க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றினர்.
ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 12 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் இத் தேர்வில் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு ஜேர்மனியில் 90 நிலையங்களில் நடைபெற்றது. தேர்வை மேற்பார்வை செய்வதற்கு 250க்கு மேற்பட்ட முன்னிலை மேற்பார்வையாளர்கள் பணியாற்றினார்கள்.
மழலையர்நிலை மற்றும் சிறுவர்நிலை ஆகிய இரு வகுப்புகளில் பயிலும் 800க்கு மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.