• Thu. Dec 7th, 2023

பிரான்சு நாட்டு அதிபரை கன்னத்தில் அறை விட்ட காணொளி

Jun 9, 2021

நேற்று நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பின் போது, பிரான்சு நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அவர்களை கூட்டத்தில் இருந்த நபர் கன்னத்தில் அறைவிட்டது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.

France President Emmanuel Macron slapped
Video: https://www.youtube.com/watch?v=OUDvgDO_asI

பொதுமக்கள் கூடியிருந்ததைக் கண்ட அதிபர் மேக்ரோன், ஓடி வந்து அவர்களுக்கு கைகொடுத்தார். அந்த நேரத்தில் கூட்டதினுள்ளே முகத்தை மூடிய மர்ம நபர் அதிபரை கன்னத்தில் அறைந்தார்.

பிரான்சு அதிபரின் பாதுகாப்பு படையினர் விரைந்து செயல்பட்டதால், மர்ம நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இது தொடர்பாக மர்ம நபரோடு, வேறு ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.