பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனல் 1 கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்று, யூடியூப் தளத்தில் அதிக சப்ஸ்கிரைபர்களை பெற்ற அரசியல் தலைவராக மோடி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
குஜராத்தின் முதலமைச்சராக மோடி இருந்தபோது, 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் யூடியூப் சேனல் தொடங்கினார்.
மற்ற இந்திய அரசியல் தலைவர்களில், ராகுல் காந்தியின் யூடியூப் சேனலுக்கு 5 லட்சத்து 25 ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
பிரதமர் மோடிக்கு அடுத்ததாக பிரேசில் அதிபர் போல்ஸனாரோவின் யூடியூப் தளத்தில் 36 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
மெக்சிகோ அதிபர் லோபெஸ் ஓப்ரடாருக்கு 30 லட்சம் சப்ஸ்கிரைபர்களும், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பக்கத்திற்கு 19 லட்சம் சப்ஸ்கிரைபர்களும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 7 இலட்சம் சப்ஸ்கிரைபர்களும் உள்ளனர்.