• Sat. Nov 30th, 2024

பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை 5 முறை சுட்டு கொன்ற தந்தை

Mar 10, 2022

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் வசித்து வருபவர் ஷாஜீப். இவருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து, சமீபத்தில் அவருக்கு 2வது பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தைக்கு பதில் 2வதும் பெண் குழந்தை பிறந்த ஆத்திரத்தில் அவர் இருந்துள்ளார்.

இந்நிலையில், பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை கொடூர தந்தை ஷாஜீப் துப்பாக்கியால் 5 முறை சுட்டு கொன்றுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த பெண் குழந்தையின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.