• Sun. Oct 13th, 2024

மாலைதீவில் ஜாலியாக டிடி!

Jul 10, 2021

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார்.

காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார்.

எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்த வித பயமும் இன்றி பட படவென அனல் பறக்கும் ரேப்பிட் பஃயர் கேள்விகளை கேட்டு உச்ச நடிகர்களை திக்குமுக்காட செய்திடுவார் டிடி. சினிமா உலகை பொறுத்தவரையில் திறமைக்கு ஏற்ற அளவுக்கு அழகும் தேவை.

அந்த விஷயத்தில் டிடி தன் திறமைக்கு ஏற்றவாறே பார்ப்பதற்கு அழகான முகபாவனையும் கொண்டிருப்பவர்.

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது டிடி தான்.

மாலைதீவுக்கு வெகேஷன் சென்ற போது அங்குள்ள கடலில் ஜாலி குளியல் போட்ட வீடியோக்களை தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் டிடி.

https://www.instagram.com/p/CREEf_ODxfp/