• Fri. Jan 17th, 2025

ஊருக்குள் வெள்ளம்; படகில் நடந்த திருமண ஊர்வலம்..!

Jul 10, 2021

பீகாரில் வெள்ளம் சூழ்ந்த ஊருக்குள் படகில் திருமண ஊர்வலம் நடைபெற்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆற்றைக் கடப்பதற்கு படகை பயன்படுத்தும் கிராமங்கள் உள்ளன.

ஆனால், பீகார் மாநிலம் சமஷ்டிப்பூரில், பாகமதி ஆறு பொங்கிப் பெருகியதால், கோபர்சித்தா என்ற கிராமத்தில் ஊரைக் கடப்பதற்கே படகு தேவைப்படுகிறது.

அங்கு திருமணம் முடித்த கையோடு மணமக்கள் ஊர்வலம் நடைபெறும் வழக்கம் உள்ளது. எனவே திருமண ஜோடி ஒன்று, வேறுவழியில்லாமல் படகிலேயே ஊருக்குள் ஊர்வலம் சென்று திரும்பியுள்ளது.