• Tue. Dec 3rd, 2024

மும்பையில் 144 தடை உத்தரவு!

Dec 11, 2021

மும்பையில் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மும்பை பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களிலும் பொதுமக்கள் திரளாகக் கூடுவதற்கும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஊர்வலங்கள், பேரணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

3 வயதுடைய குழந்தை உட்பட 7 பேர் ஒமிக்ரான் பாதிப்புடன் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கையாக இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.