• Sat. Dec 7th, 2024

இன்று தமிழகத்தின் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

Dec 11, 2021

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று(11) நடைபெறுகிறது.

அதன்படி, இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னையில் இதுவரை 10 இலட்சத்து 38 ஆயிரத்து 623 பேர் 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

எனவே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் இந்த முகாமை பயன்படுத்தி தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.