• Fri. Jul 26th, 2024

இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரிப்பு- கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்

Dec 11, 2021

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று வைரஸ் கணிசமாக கட்டுக்குள் உள்ளது. எனினும் சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இதற்கிடையில், ஒமைக்ரான் வகை கொரோனா அச்சுறுத்தலும் அதிகரித்து வருவதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் 10 மாநிலங்களில் உள்ள 27 மாவட்டங்களில் தொற்று அதிகம் உள்ளதால் அந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார்.

அதிக அளவில் கொரோனா தொற்று பரவும் பகுதிகளில், இரவு நேர ஊரடங்கு உத்தரவு, மக்கள் கூடுவதைக் கட்டுப்படுத்துதல், திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பவர்களைக் குறைத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.