• Tue. Mar 26th, 2024

மீண்டும் அமெரிக்காவில் உச்சமடையும் கொரோனா!

Aug 27, 2021

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்பை எதிர் கொண்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.50 இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.93 கோடியைக் கடந்துள்ளது.

ஒரே நாளில் 1100 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 6 இலட்சத்து 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.