• Thu. Nov 28th, 2024

கொரோனா போகணுமா – நித்தியானந்தா சொல்வதைக் கேளுங்கள்

Jun 7, 2021

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், பாலியல் புகார், ஆண் சீடர் பாலியல் புகார், மோசடி என்று பல வழக்குகளில் சிக்கியவர்.

இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாகி, வீடியோ கான்பெரென்ஸ்ஸில் மட்டும் வருகிறார்.

இவர் வெளியிடும் வீடியோ அடிக்கடி இணையத்தில் வைரலாகிவரும் நிலையில் சமீபத்திய வீடியோ ஒன்றில் தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தால் கொரோனா போகும் என கூறியுள்ளார்.

நித்யானந்தா கைலாசா என்ற புதிய நாட்டை அறிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதோடு இளைஞர்கள் தன் நாட்டிற்கு வரலாம் என்று அறிவித்த நிலையில், ஆர்வம் உள்ளவர்கள் ஆஸ்திரேலியா வந்தால் அங்கிருந்து கைலாசாவிற்கு தனி விமானம் மூலம் அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் நித்தியானந்தா கூறியிருந்தார்.

இந்நிலையில் நித்தியானந்தா அநேகமாக இந்தோனேஷியா நாட்டின் தீவுகளில் ஒன்றையோ அல்லது நியூசிலாந்து நாட்டின் அருகில் உள்ள ஆளில்லாத தீவுகளில் ஒன்றையோ அவர் விலைக்கோ அல்லது நீண்ட நாள் குத்தகைக்கோ எடுத்திருக்க வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இப்போது நித்தியானந்தா பெண்தெய்வங்கள் பெயரில் தனது சீடர்களுக்கு குறி சொல்லி வருகின்றார். அப்போது ஒருவர் கொரோனா எப்போது இந்தியாவை விட்டு போகும் எனக் கேட்டதற்கு, ‘தன் உடலில் புகுந்துள்ள அம்மன் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தால் தான் கொரோனா இந்தியாவை விட்டு ஓடும்’ என நித்தியானந்தா கூறியுள்ளார்.