• Sun. Jul 21st, 2024

ஜூலை மாத ராசி பலன் 2021 – மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி

Jul 1, 2021

ஜோதிடத்தைப் பொறுத்தவரை கிரகங்களின் பெயர்ச்சி வைத்து கூறப்படும் கோசார பலன் மிகவும் முக்கியத்துவமானதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் ஜூலை மாதம் மிகவும் முக்கியமான கிரகங்களான புதன், சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி நிகழ உள்ளது. இதனடிப்படையில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

​மேஷம்

மேஷ ராசி அன்பர்களே உங்கள் பேச்சுத் திறன் மற்றும் தகவல் தொடர்புத் திறன் மூலம் உங்கள் வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் ஆரோக்கியம், கல்வி சிறப்பாக இருக்கும்.

கணவன் மனைவி இடையே உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆசைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சில ஆடம்பர செலவுகளை நீங்கள் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தின் மூலம் நீங்கள் சிறந்த ஆதாயம் பெறுவீர்கள். குடும்ப பிரச்சினைகள் காரணமாக பணியிடத்தில் உங்களால் சிறப்பாக கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.

தொழில் குறித்த எந்தவொரு முயற்சியையும் நீங்கள் பொறுமையாக எடுக்க வேண்டும். நீங்கள் கடின முயற்சி செய்து தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

தலைவலி, காய்ச்சல் போன்ற சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். குறிப்பாக கண்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். மாணவர்களின் அறிவுத் திறன் பெருகும். மேற்படிப்பு படிக்க நினைக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் பயில்வார்கள்.

​ரிஷபம்

ரிஷப ராசியின் பொருளாதாரம் சிறப்பாகவும், வருமானம் அதிகரிக்கும் வகையில் இருக்கும். அதனால் பற்றாக்குறை நீங்கும். உத்தியோகம், தொழில் போன்ற பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவும். மாணவர்கள் கல்வி சிறப்பாக இருக்கும்.

திருமணம் முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்வாய்ப்பு ஏற்படும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பெருகும்.

பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு காணப்படும்.

பணிச்சுமை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. வார்த்தையில் கவனமாக இருப்பதோடு, தேவையற்ற பதட்டத்தை தவிர்க்கவும்.

வெளிநாடு தொடர்பான வேலை, தொழில் செய்பவர்களுக்கு லாபம் தருவதாக இருக்கும். உணவு சார்ந்த தொழில் முன்னேற்றம் தரும்

இந்த மாதம் புதிய தொழில் ஒப்பந்தங்கள் தேடி வர வாய்ப்புள்ளது. உங்கள் செயல் மீது தன்னம்பிக்கை அதிகரிக்கும். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம்.

​மிதுனம்

ஜூலை மாதத்தில் மிதுன ராசியின் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் வாய்ப்புகளும், வெற்றியும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடற்பயிற்சி மற்றும் தியானம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். முதுகுவலி, மூட்டு வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

பணியில் திருப்தி இருக்கும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பணியிடத்தில் பேச்சு வார்த்தைகளில் கவனம் தேவை. உங்கள் கவனமற்ற வீண் பேச்சால் உங்கள் மதிப்பு குறையும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தருவதாக இருக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். மாணவர்களின் கல்வியில் சாதகமான பலனைத் தரும்.

திருமண தடை நீங்கி நிச்சயமாக வாய்ப்புள்ளது. திருமணமான தம்பதிகள் இடையே ஒற்றுமை மற்றும் நல்லுறவு காணப்படும்.

​கடகம்

உங்களின் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். உங்களின் கவலைகள் குறையும். குடும்பத்தின் ஒற்றுமை அதிகரிக்கும். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, தொழிலில் சில முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

தொழில், பணியிடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம் சக பணியாளர்களுடன் கவனமாக நடந்து கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும்.

காதல் உணர்வு அதிகரிக்கும். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்க நல்வாய்ப்பாக இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும், குடும்ப பெரியவர்களிடமிருந்து ஆலோசனைகள் சிறப்பான பலனைத் தரும்.

வேலையில் உங்களின் சிறப்பான செயலைப்பார்த்து மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். பணியிடத்தில் சற்று கவனமாக நடந்து கொள்வதால் உங்களின் மதிப்பு உயரும்.

தொழிலில் மனநிறைவானதாகவும், லாபம் பெறக்கூடியதாகவும் இருக்கும். இருப்பினும் முக்கிய முடிவுகளை சற்று யோசித்து எடுப்பது அவசியம்.

பணிச்சுமை காரணமாக உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சில நேரங்களில் மந்த நிலையாக தோன்றும். மாணவர்கள் கவனமுடன் கல்வியில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது.

சிம்மம்

குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தம்பதியர் விட்டுக் கொடுத்து செல்வது சிறப்பாக இருக்கும். பணப் புழக்கம் அதிகம் இருக்காது இருப்பினும் பற்றாக் குறையும் ஏற்பட வாய்ப்பு குறைவு. தொழில் மற்றும் வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இளம் வயது சிம்ம ராசி அன்பர்கள் மனதில் காதல் அரும்பு மலரும். குடும்பத்தின் வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். பொருளாதார ஸ்திரத் தன்மையைக் காண்பீர்கள்.

பணியில் உங்கள் முயற்சிக்கேற்ற பலன் கிடைப்பது கடினமாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க தாமதமாகலாம்.

புத்திசாலித்தனம், கடின உழைப்பின் மூலம் சிறப்பான வெற்றியைப் பெற்றிடலாம். குடும்ப வாழ்க்கை, தொழில் என இரண்டையும் சமநிலையில் எடுத்துச் செல்வது நல்லது.

ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் விரைவில் குணமாகும். மாணவர்கள் படிப்பை முடித்தவுடன் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

கன்னி

ஜூலை மாதம் கன்னி ராசிக்கு நன்மை தீமை என இரண்டும் சேர்ந்த கலவையான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் ஏற்ற இறக்கமான பலன்களும், உத்தியோகம் மற்றும் தொழிலில் நன்மை தீமை என இரண்டு பலன்களும் கிடைக்கும். பணியில் ஏற்படும் பிரச்சினைகளை புத்திசாலித்தனமாக சமாளிப்பீர்கள்.

வேலை தொடர்பான அலைச்சல்கள் அதிகம் இருக்கும். குடும்பத்துடன் நேரம் குறைவாக செலவிட நேரிடும். இதனால் உறவில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். உங்கள் செயலில் கவனக் குறைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. மனதை அமைதியாக காத்துக் கொள்ளவும்.

இளைஞர்கள் மனதில் காதல் அரும்பு மலரும். திருமணமான கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்வதால் உறவில் பலம் பெறும். தேவையற்ற செலவுகள் ஏற்படும் என்பதால் சேமிப்பது இயலாது.

பணிச்சுமையால் தேவையற்ற மன பதற்றம் ஏற்படும். இதனால் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.