சமீபத்தில் மீனவர் ஒருவர் ரஷ்யாவின் நோர்வே மற்றும் பேரண்ட்ஸ் கடலில் இருந்து மிகவும் விசித்திரமான மீன் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். 39 வயதான ரோமன் ஃபொரட்சோவ் நீண்ட காலமாக கடலின் ஆழ்பகுதிகளுக்கு சென்று மீன்களை பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன் ரோமன் ஆழ்கடலில் வலையை வீசி உள்ளார். வழக்கம் போல் வலையை இழுத்து மீன்களை எடுத்துள்ளார். அப்போது அவர் வலையில் மிகவும் விசித்திரமான மீன் ஒன்றை கவனித்துள்ளார்.
தன் வலையில் சிக்கிய விசித்திர மீனின் புகைப்படங்களை ரோமன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ரோமன் பிடித்த மீன்களின் கண்கள் பொத்தான்களை போல் இருந்து உள்ளது. அதன் உடல் வெள்ளி மற்றும் கருப்பு நிறத்தில் இருந்துள்ளது.
மேலும் அதன் வாய் பகுதி விசித்திரமானதாகவும் இருந்துள்ளது. அந்த மீனின் பற்கள் அரக்கர்களுக்கு இருப்பது போல் கூர்மையாக இருந்துள்ளது.
விசித்திர மீனை பார்த்த உடன் அதிர்ச்சியில் உறைந்து போன ரோமன் அதன் வயிற்று பகுதியில் குறியீடு ஒன்று இருப்பதையும் பார்த்தார். இதனால் இந்த மீனை ஏலியன் மீன் என்று ரோமன் பெயரிட்டுள்ளார். ரோமன் பதிவிட்டுள்ள புகைப்படங்களுக்கு ஏராளமானோர் பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.