• Tue. May 28th, 2024

வரலாற்றில் இன்று ஜூலை 30

Jul 30, 2021

சூலை 30 கிரிகோரியன் ஆண்டின் 211 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 212 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 154 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

762 – பகுதாது நகரம் நிறுவப்பட்டது.

1502 – கிறித்தோபர் கொலம்பசு தனது நான்காவது கடற்பயணத்தின் போது ஒந்துராசை அடைந்தார்.

1619 – யேம்சுடவுன் நகரில் அமெரிக்காக்களின் முதலாவது பிரதிநிதிகள் சபையின் கூட்டம் நடைபெற்றது.

1626 – இத்தாலியில் நாபொலி நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் உயிரிழந்தனர்.

1635 – எண்பதாண்டுப் போர்: ஆரஞ்சு இளவரசர் பிரெடெரிக் என்றி எசுப்பானிய இராணுவத்திடம் இருந்து தாம் இழந்த முக்கிய கோட்டையைக் கைப்பற்ற சமரை ஆரம்பித்தார்.

1656 – சுவீடன் படையினர் மன்னர் பத்தாம் சார்லசு குசுத்தாவ் தலைமையில் வார்சாவில் நடந்த சமரில் போலந்து-லித்துவேனியப் படையினரை வென்றனர்.

1733 – முதலாவது மசோனிக் விடுதி மாசச்சூசெட்சில் அமைக்கப்பட்டது.

1756 – கட்டிடக் கலைஞர் பிரான்செசுக்கோ பார்த்தலோமியோ ராசுத்திரெல்லி சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் தாம் அமைத்த கத்தரீன் அரண்மனையை உருசிய அரசி எலிசபெத்திடம் கையளித்தார்.

1811 – மெக்சிக்கோ விடுதலைப் போரின் தலைவர் மிகுவேல் இடால்கோ காஸ்டில்லா எசுப்பானியரினால் மெக்சிக்கோவில் தூக்கிலிடப்பட்டார்.

1865 – அமெரிக்காவின் பிரதர் ஜொனத்தன் என்ற நீராவிக் கப்பல் கலிபோர்னியாவில் மூழ்கியதில் 225 பயணிகள் உயிரிழந்தனர்.

1866 – அமெரிக்காவின் லூசியானா, நியூ ஓர்லென்ஸ் நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 48 பேர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.

1871 – நியூயார்க்கில் இசுட்டேட்டன் தீவில் வெசுட்ஃபீல்டு என்ற கப்பல் வெடித்ததில் 85 பேர் உயிரிழந்தனர்.

1912 – சப்பானியப் பேரரசர் மெய்ஜி இறந்தார். அவரது மகன் யொசிகீட்டோ பேரசராக முடிசூடினார்.

1930 – மொண்டேவீடியோ நகரில் நடைபெற்ற முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் உருகுவை அணி அர்கெந்தீனா அணியை 4-2 கணக்கில் தோற்கடித்து முதலாவது உலகக்கோப்பையை வென்றது.

1932 – கலிபோர்னியாவில் 10வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.

1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் ஐ-58 அமெரிக்காவின் இந்தியானாபொலிசு என்ற கடற்படைக் கப்பலை மூழ்கடித்ததில் 883 கடற்படையினர் உயிரிழந்தனர்.

1962 – திரான்சு-கனடிய நெடுஞ்சாலை, உலகின் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலை, அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

1966 – இங்கிலாந்து அணி மேற்கு செருமனியை 4-2 என்ற கணக்கில் வென்று காற்பந்து உலகக்கோப்பையை வென்றது.

1969 – வியட்நாம் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் தென் வியட்நாம் சென்று அங்கு அரசுத்தலைவர் நியூவென் வான் தியூவை சந்தித்தார்.

1971 – அப்பல்லோ திட்டம்: அப்பல்லோ 15 விண்கலத்தில் சென்ற டேவிட் ஸ்காட், யேம்சு எர்வினனாகியோர் பால்க்கன் என்ற தரையுலவியுடன் நிலாவில் இறங்கினர்.

1971 – சப்பானில் இரண்டு விமானங்கள் வானில் மோதியதில் 162 பேர் உயிரிழந்தனர்.

1980 – பிரான்சு, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றிடம் இருந்து வனுவாட்டு விடுதலை பெற்றது.

1981 – கம்யூனிசப் போலந்தில் உணவுப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 50,000 பேர் லோட்சு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டனர்.

1995 – ஈழப்போர்: இலங்கை, வாழைச்சேனையில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் கிழக்கிலங்கை இராணுவத் தளபதி நளின் அங்கம்மன கொல்லப்பட்டார்.[1]

1997 – ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் “திரெட்போ” என்ற இடம்பெற்ற மண்சரிவில் 18 பேர் உயிரிழந்தனர்.

2012 – ஆந்திரப் பிரதேசம், நெல்லூரில் தமிழ்நாடு விரைவுவண்டி தீப்பிடித்ததில் 32 பயணிகள் உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்தனர்.

2012 – தில்லியில் மின்வெட்டு ஏற்பட்டதில் 300 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

2014 – மகாராட்டிரத்தில் இடம்பெற்ற மண்சரிவில் 20 பேர் உயிரிழந்தனர்.