• Thu. Jul 18th, 2024

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 20

Aug 20, 2021

ஆகத்து 20 கிரிகோரியன் ஆண்டின் 232 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 233 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 133 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

14 – உரோமைப் பேரரசர் அகஸ்டசின் பேரனும், முடிக்குரியவனுமான அக்ரிப்பா பொசுதூமசு அவனது காவலர்களால் கொலை செய்யப்பட்டான்.

636 – அராபியப் படையினர் காலிது இப்னு அல்-வாலிது தலைமையில் பைசாந்தியப் பேரரசிடம் இருந்து லெவண்ட் பிரதேசத்தைக் கைப்பற்றினர். இதுவே அராபியாவுக்கு வெளியே முசுலிம்களின் முதலாவது பெரும் பரவலாகக் கருதப்படுகிறது.

917 – பல்காரியாவின் முதலாம் சிமியோன் மன்னர் பைசாந்திய இராணுவத்தை அச்செலோசு சமரில் தோற்கடித்தார்.

1000 – அங்கேரி நாடு முதலாம் இசுடீவனால் உருவாக்கப்பட்டது.

1083 – அங்கேரியின் முதலாவது மன்னர் முதலாம் இசுடீவனும், அவரது மகன் எமெரிக்கும் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.

1191 – மூன்றாம் சிலுவைப் போரின் போது கைப்பற்றப்பட்ட 2,600 முதல் 3,000 வரையான சலாகுத்தீனின் முசுலிம் இராணுவத்தினர் இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் மன்னரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1852 – அத்திலாந்திக்கு என்ற அமெரிக்க நீராவிக் கப்பல் மூழ்கியதில் 150 பேர் உயிரிழந்தனர்.

1858 – சார்லஸ் டார்வின் தனது படிவளர்ச்சிக் கொள்கையை இயற்கைத் தேர்வு மூலம் முதலில் வெளியிட்டார், இதே கொள்கை அதே நாளில் ஆல்பிரடு அரசல் வாலேசினாலும் வெளியிடப்பட்டது.

1866 – அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜோன்சன் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

1910 – அமெரிக்காவின் வடகிழக்கு வாசிங்டன், வடக்கு ஐடகோ, மேற்கு மொன்ட்டானா ஆகிய இடங்களில் பெரும் தீ பரவியது.

1914 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சை செருமனி கைப்பற்றியது.

1917 – இலங்கையில் ஒரு ரூபாய் நாணயத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

1940 – மெக்சிக்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்த உருசியப் புரட்சியாளர் லியோன் திரொட்ஸ்கி படுகாயமுற்று அடுத்த நாள் இறந்தார்.

1944 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் 168 போர்க் கைதிகள் செருமனியின் புக்கென்வால்ட் வதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: உருமேனியா மீது சோவியத் ஒன்றியம் தாக்குதலை ஆரம்பித்தது.

1948 – இலங்கை குடியுரிமை சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 700,000 இற்கும் அதிகமான (மொத்த மக்கள்தொகையில் 11%) இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.

1950 – கொரியப் போர்: வடகொரியப் படைகள் நாக்டொங் ஆற்றைக் கடந்து தேகு நகரைத் தாக்க எடுத்த முயற்சிகளை ஐநா படைகள் முறியடித்தன.

1955 – மொரோக்கோவில், அட்லசு மலைப் பகுதியைச் சேர்ந்த பேர்பர் படைகள் இரண்டு குடியேற்றங்களைத் தாக்கி 77 பிரெஞ்சுக்காரரைக் கொலை செய்தனர்.

1960 – செனெகல் மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.

1968 – பனிப்போர்: சோவியத்-ஆதரவு வார்சா உடன்பாட்டுப் படையினர் 200,000 பேர் செக்கோசிலோவாக்கியாவை ஊடுருவியது. இத்தாக்குதலில் அல்பேனியா, உருமேனியா ஆகியன பங்குபற்ற மறுத்து விட்டன.

1975 – நாசா வைக்கிங் 1 என்ற விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.

1977 – நாசா வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.

1988 – ஈரான் – ஈராக் போர்: 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.

1988 – வட அயர்லாந்தில் பிரித்தானியப் படையினர் சென்ற பேருந்து ஒன்றில் ஐஆர்ஏ போராளிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் எட்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், மேலும் 28 பேர் காயமடைந்தனர்.

1989 – தேம்சு ஆற்றில் படகு ஒன்று மூழ்கியதில் 51 பேர் உயிரிழந்தனர்.

1991 – மாஸ்கோவில் 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள் சோவியத் அரசுத்தலைவர் மிக்கைல் கொர்பச்சோவிற்கு எதிராக நடத்தப்பட்ட இராணுவப் புரட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1991 – எஸ்தோனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.

1995 – இந்தியா, பிரோசாபாத் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 358 பேர் உயிரிழந்தனர்.

1997 – அல்ஜீரியாவில் 60 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1998 – கியூபெக் மாநிலம் மத்திய அரசின் அனுமதியின்றி கனடாவில் இருந்து சட்டபூர்வமாகப் பிரிய முடியாது என கனடாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

2006 – ஈழப்போர்: அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006: கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் அல்லைப்பிட்டியில் காணாமல் போனார்கள்.

2006 – ஈழப்போர்: நமது ஈழநாடு பத்திரிகையின் பணிப்பாளரும், முன்னாள் யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினருமான சி. சிவமகராஜா தெல்லிப்பழையில் உள்ள அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2008 – எசுப்பானியா, மத்ரித் நகரில் பராகாசு விமான நிலையத்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில், அதில் பயணம் செய்த 172 பேரில் 146 பேர் உயிரிழந்தனர். மேலும் எட்டு பேர் மருத்துவமனையில் இறந்தனர்.

2014 – சப்பானில் இரோசிமா நகரில் நிகழ்ந்த நிலச்சரிவுகளில் 72 பேர் உயிரிழந்தனர்.

2016 – துருக்கியின் காசியான்டெப் நகரில் குர்தியத் திருமண நிகழ்வொன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 54 பேர் கொல்லப்பட்டனர்,