• Mon. Jul 22nd, 2024

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 21

Aug 21, 2021

ஆகத்து 21 கிரிகோரியன் ஆண்டின் 233 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 234 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 132 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1140 – சொங் சீனத் தளபதி யூ பெய் படையினர் சின் சீனப் படையினரை சொங்–சி போரில் வென்றனர்.

1331 – மூன்றாம் இசுடெபான் உரோசு மன்னர் அவரது மகன் துசானிடம் சரணடைந்தார். துசான் செர்பியாவின் மன்னராக முடி சூடினான்.

1680 – புவெப்லோ இந்தியப் பழங்குடிகள் எசுப்பானியாவிடம் இருந்து சாந்தா பே நகரைக் கைப்பற்றினர்.

1770 – ஜேம்ஸ் குக் கிழக்கு அவுஸ்திரேலியாவை பெரிய பிரித்தானியாவுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.

1772 – சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னர் தான் மேற்கொண்ட இராணுவப் புரட்சியை முடித்துக் கொண்டு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி, அரை நூற்றாண்டுக் கால நாடாளுமன்ற ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படையினர் பிரெஞ்சுக் குடியேற்றமான பாண்டிச்சேரியை முற்றுகையிட்டனர்.

1791 – எயித்தியில் இடம்பெற்ற வூடூ பண்டிகை அடிமைகளின் கிளர்ச்சியாக மாறியதை அடுத்து எயித்தியப் புரட்சி ஆரம்பமானது.

1808 – ஆர்தர் வெல்லசுலி தலைமையிலான பிரித்தானிய, போர்த்துக்கீசப் படையினர் பிரெஞ்சுப் படையினரை போர்த்துகலில் விமெய்ரோ கிராமத்தில் நடந்த சமரில் வென்றனர்.

1821 – ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

1831 – வர்ஜீனியாவில் அமெரிக்கக் கறுப்பின அடிமைகளுக்குத் தலைமை தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத் தொடங்கினார். இதன் போது 55 முதல் 65 வெள்ளையர்கள் கொல்லப்பட்டனர்.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கேன்சசு மாநிலத்தில் லோரன்ஸ் நகரம் அழிக்கப்பட்டது.

1888 – முதலாவது வெற்றிகரமான கூட்டல் கருவி அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.

1911 – லியனார்டோ டா வின்சியின் மோனா லிசா ஓவியம் பாரிசின் இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.

1920 – ஏ. சபாபதி ஓய்வு பெற்றதை அடுத்து சேர் அ. கனகசபை இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குத் தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவானார்.

1942 – இரண்டாம் உலகப் போர்: உருசியாவின் எல்பிரஸ் மலை உச்சியில் நாட்சி ஜெர்மனியின் கொடி நாட்டப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: கனடிய, போலந்துப் படைகள் பிரான்சின் முக்கிய நகரான பலேசைக் கைப்பற்றின.

1957 – சோவியத் ஒன்றியம் ஆர்-7 என்ற முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது.

1959 – அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர் அவாயை அமெரிக்காவின் 50வது மாநிலமாக இணைக்கும் ஆணைக்கு கையெழுத்திட்டார்.

1963 – தெற்கு வியட்நாமின் குடியரசு இராணுவத்தினர் நாட்டின் பௌத்தத் தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர்.

1971 – பிலிப்பீன்சு, மணிலாவில் லிபரல் கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் மார்க்கோசுக்கு எதிரான பல வேட்பாளர்கள் காயமடைந்தனர்.

1982 – லெபனான் உள்நாட்டுப் போர்: லெபனானில் இருந்து பலத்தீன விடுதலை இயக்கத்தினர் வெளியேறுவதைக் கண்காணிக்க பன்னாட்டுப் படையினர் பெய்ரூத் வந்து சேர்ந்தனர்.

1983 – பிலிப்பீன்சு எதிர்க்கட்சித் தலைவர் பெனீனோ அக்கீனோ மணிலாவில் கொலை செய்யப்பட்டார்.

1986 – கமரூனில் நியோஸ் ஏரி எரிமலையில் காபனீரொட்சைட்டு வளிமம் கசிந்ததில் 20 கிமீ சுற்றளவில் 1,800 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1988 – நேபாள-இந்திய எல்லைப்புறத்தில் 6.9 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றதில் 1,450 பேர் வரை இறந்தனர்.

1991 – லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1991 – சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.

1993 – நாசா மார்சு ஒப்சர்வர் விண்கலத்துடனான தொடர்பை இழந்தது.

1994 – மொரோக்கோவில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 44 பேரும் உயிரிழந்தனர்.

1995 – அமெரிக்காவில் சியார்ச்சியா மாநிலத்தில் பிரேசில் வானூர்தி ஒன்று தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 29 பேரில் 9 பேர் உயிரிழந்தனர்.

2007 – சூறாவளி டீன் மெக்சிகோவை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.

2013 – சிரியாவில் கோட்டா என்ற இடத்தில் வேதித் தாக்குதல் நடத்தப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

2014 – பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: இசுரேலிய வான் தாக்குதல்களில் ஹமாஸ் இயக்கத்தின் மூன்று மூத்த தளபதிகள் கொல்லப்பட்டனர்.

2014 – குவாத்தமாலாவில் பெல் 206 உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஐந்து இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.