• Sat. Dec 21st, 2024

வரலாற்றில் இன்று டிசம்பர் 13

Dec 13, 2021

டிசம்பர் 13 கிரிகோரியன் ஆண்டின் 347 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 348 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 18 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1294 – ஐந்தாம் செலசுத்தீன் திருத்தந்தை பதவியில் இருந்து விலகினார். இவர் ஐந்து மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்தார்.

1577 – சேர் பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்தின் பிளைமவுத்தில் இருந்து தனது உலகத்தைச் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார்.

1636 – வட அமெரிக்காவில் மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றம் பெக்கோட் பழங்குடியினரில் இருந்து பாதுகாக்கவென மூன்று துணைப்படைகளை அமைத்தது.

1642 – டச்சு நாடுகாண் பயணி ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தை அடைந்தார். இவரே நியூசிலாந்தை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவார்.

1758 – வில்லியம் கோமகன் என்ற ஆங்கிலேயக் கப்பல் வடக்கு அத்திலாந்திக் கடலில் மூழ்கியதில் 360 பேர் உயிரிழந்தனர்.

1867 – இலண்டன், கிளெர்க்கென்வெல் என்ற இடத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

1888 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டது.

1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சீனாவின் நாஞ்சிங் நகரம் சப்பானிடம் வீழ்ந்ததை அடுத்து அங்கு பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், பாலியல் வதைக்கும் உள்ளாக்கப்பட்டனர்.

1938 – பெரும் இன அழிப்பு: செருமனியின் ஆம்பர்கு நகரில் நியூவென்காம் வதை முகாம் திறக்கப்பட்டது.

1943 – இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தில் கலவ்ரித்தா என்ற இடத்தில் செருமனியப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 1,200 கிரேக்கப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 710 போர் விமானங்கள் செருமனியின் கீல் நகர் மீது தாக்குதலை நடத்தின.

1949 – இசுரேலின் சட்டமன்றம் நாட்டின் தலைநகரை எருசலேம் நகருக்கு மாற்ற முடிவெடுத்தது.

1959 – பேராயர் மூன்றாம் மக்காரியோசு சைப்பிரசின் முதலாவது அரசுத்தலைவரானார்.

1960 – எத்தியோப்பியாவின் பேரரசர் முதலாம் ஹைலி செலாசி பிரேசிலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது, அவரது மெய்ப்பாதுகாவலர்கள் தலைநகரைக் கைப்பற்றி இளவரசர் அசுபா வோசனைப் பேரரசராக அறிவித்தனர். ஆனாலும் இந்த இராணுவப் புரட்சி தோல்வியடைந்தது.

1972 – அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், அரிசன் சிமித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே.

1974 – மால்ட்டா நாடுகளின் பொதுநலவாயத்தின் கீழ் குடியரசானது.

1977 – அமெரிக்காவின் ஏர் இந்தியானா விமானம் வீழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.

1981 – போலந்தில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

1982 – தென்மேற்கு ஏமனை 6.0 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 2,800 பேர் உயிரிழந்தனர், 1,500 பேர் காயமடைந்தனர்.

1988 – பலத்தீனத் தலைவர் யாசிர் அரஃபாத் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றினார்.

1996 – ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கோஃபி அன்னான் தெரிவு செய்யப்பட்டார்.

2001 – இந்திய நாடாளுமன்றக் கட்டடம் சன்சத் பவன் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

2003 – ஈராக் போர்: முன்னாள் ஈராக் அரசுத் தலைவர் சதாம் உசேன் அவரது சொந்த ஊரான திக்ரித்துக்கு அருகே அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

2004 – முன்னாள் சிலி சர்வாதிகாரி அகஸ்தோ பினோசெட் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

2006 – ஊனமுற்றோர் உரிமைகள் சாசனம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

2011 – பெல்ஜியத்தில் நத்தார்ச் சந்தை ஒன்றில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், 125 பேர் காயமடைந்தனர்.