• Mon. Jun 24th, 2024

வரலாற்றில் இன்று ஜூலை 14

Jul 14, 2021

சூலை 14 கிரிகோரியன் ஆண்டின் 195 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 196 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 170 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1223 – இரண்டாம் பிலிப்பு இறந்ததை அடுத்து அவரது மகன் எட்டாம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.

1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசு மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றினர்.

1791 – இங்கிலாந்துத் திருச்சபைக்கு எதிரானவர்கள் மீது கலவரம் ஆரம்பித்ததை அடுத்து, பிரெஞ்சுப் புரட்சியின் ஆதரவாளரான சோசப்பு பிரீசிட்லி பர்மிங்காமில் இருந்து வெளியேறினார்.

1798 – அமெரிக்க அரசைப் பற்றி அவதூறாகவோ, பொய்யாகவோ எழுதுவது, பிரசுரிப்பது குற்றமாக ஐக்கிய அமெரிக்காவில் சட்டம் இயற்றப்பட்டது.

1814 – இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் நிலநடுக்கம் உணரப்பட்டது.[1]

1874 – சிகாகோவில் ஏற்பட்ட தீ விபத்தில் நகரின் 47 ஏக்கர்கள் அழிந்தது. 20 பேர் உயிரிழந்தனர். 812 கட்டடங்கள் சேதமடைந்தன.

1889 – பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் “பன்னாட்டுத் தொழிலாளர் நாடாளுமன்ற” நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை-நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது.

1900 – சீனாவுக்கு எதிரான எட்டு நாடுகள் கூட்டணி தியென்சினைக் கைப்பற்றியது.

1933 – செருமனியில் நாட்சி கட்சி தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.

1938 – அவார்ட் இயூசு உலகைச் சுற்றி 91-மணி நேரத்தில் விமானத்தில் பறந்து உலக சாதனையை ஏற்படுத்தினார்.

1948 – இத்தாலியின் கம்யூனிசக் கட்சியின் தலைவர் பல்மீரோ டொக்ளியாட்டி நாடாளுமன்றத்துக்கு முன்னர் சுடப்பட்டார்.

1958 – ஈராக்கியப் புரட்சி: ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலவரானார்.

1965 – மரைனர் 4 விண்கலம் செவ்வாய்க் கோளுக்குக் கிட்டவாகச் சென்று முதற்தடவையாக வேறொரு கோளின் மிக அண்மையான படங்களைப் பூமிக்கு அனுப்பியது.

1966 – குவாத்தமாலா நகரில் மனநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற தீவிபத்தில் 225 பேர் கொல்லப்பட்டனர்.

1967 – நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.

1969 – ஒந்துராசு காற்பந்து அணி எல் சால்வடோர் அணியிடம் தோற்றதை அடுத்து, ஒந்துராசில் சல்வதோர் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது.

1976 – கனடாவில் மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்டது.

1995 – எம்பி3 பெயரிடப்பட்டது.

1995 – இலங்கை இராணுவத்தினரின் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் புக்காரா ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

2002 – பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரெஞ்சு அரசுத்தலைவர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார்.

2015 – நாசாவின் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவுக்கு அண்மையாக முதல் தடவையாக சென்றது.

2016 – பிரான்சில் நீசு நகரில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 86 பேர் உயிரிழந்தனர், 400 பேர் காயமடைந்தனர்.