• Fri. Oct 18th, 2024

வரலாற்றில் இன்று ஜூலை 20

Jul 20, 2021

சூலை 20 கிரிகோரியன் ஆண்டின் 201 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 202 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 164 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு, கோவில் மலையின் வடக்கே அந்தோனியா கோட்டை மீது தாக்குதலைத் தொடுத்தான்.

1402 – அங்காரா சமரில் பேரரசர் தைமூர் உதுமானியப் பேரரசர் சுல்தான் முதலாம் பயெசிதைத் தோற்கடித்தார்.

1592 – கொரியா மீதான முதலாவது சப்பானிய ஆக்கிரமிப்பின் போது, சப்பானியப் படையினர் பியொங்யாங் நகரைக் கைப்பற்றினர்.

1799 – டெக்கில் முதலாம் கியோர்கிசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார்.

1807 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் உலகின் முதலாவது உள் எரி பொறிக்கான காப்புரிமையை யோசெப் நிசிபோர் நியெப்சிற்கு வழங்கினார்.

1810 – பொகோட்டாவின் குடிமக்கள் எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர்.

1831 – செனெக்கா, சானீ அமெரிக்கப் பழங்குடிகள் மேற்கு ஒகையோவில் உள்ள தமது நிலங்களை மிசிசிப்பி ஆற்றின் மேற்குப் பகுதியின் 60,000 ஏக்கர் நிலங்களைப் பெற்றுக் கொண்டு விட்டுக் கொடுத்தனர்.[1]

1871 – பிரித்தானியக் கொலம்பியா கனடாவுடன் இணைந்தது.

1903 – போர்டு நிறுவனம் தனது முதலாவது தானுந்தை ஏற்றுமதி செய்தது.

1917 – முதலாம் உலகப் போர்: யுகோசுலாவிய இராச்சியத்தை உருவாக்கும் உடன்பாடு செர்பிய இராச்சியத்திற்கும் யுகோசுலாவ் குழுவிற்கும் இடையில் எட்டப்பட்டது.

1920 – பாரிசு அமைதி உடன்பாட்டிற்கமைய, கிரேக்க இராணுவம் சிலிவ்ரி நகரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1923 இல் அந்நகரைத் துருக்கியிடம் இழந்தது.

1922 – உலக நாடுகள் சங்கம் ஆப்பிரிக்காவில் டோகோலாந்தை பிரான்சுக்கும், தங்கனீக்காவை ஐக்கிய இராச்சியத்துக்கும் வழங்கியது.

1932 – புருசிய இராணுவப் புரட்சியை அடுத்து செருமானிய அரசுத்தலைவர் புருசிய அரசைக் கலைத்தார்.

1935 – மிலனில் இருந்து பிராங்க்ஃபுர்ட் சென்ற விமானம் சுவிட்சர்லாந்து மலையில் மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர்.

1940 – டென்மார்க் உலக நாடுகள் அமைப்பில் இருந்து விலகியது.

1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனிய இராணுவத் தளபதி ஒருவனால் இட்லர் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் இருந்து அவர் தப்பினார்.

1949 – 19 மாதப் போரின் முடிவில் இசுரேலும் சிரியாவும் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டன.

1951 – யோர்தான் மன்னர் முதலாம் அப்துல்லா எருசலேமில் வெள்ளிக்கிழமைத் தொழுகையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

1954 – மேற்கு செருமனியின் உளவுத்துறைத் தலைவர் ஒட்டோ ஜோன் கிழக்கு செருமனிக்குத் தப்பிச் சென்றார்.

1960 – சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராகத் தெரிவானார். இவரே உலகில் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது பெண் அரசுத்தலைவர் ஆவார்.

1962 – கொலம்பியாவில் நிலநடுக்கத்தில் 40 பேர் உயிரிழந்தனர்.

1964 – வியட்நாம் போர்: வியட்கொங் படைகள் “காய் பே” நகரைத் தாக்கி 11 தென் வியட்நாமியப் படையினரையும் 40 பொதுமக்களையும் கொன்றனர்.

1969 – அப்பல்லோ திட்டம்: நாசாவின் அப்பல்லோ 11 சந்திரனில் இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்றோங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் முதல் மனிதர்களாக சந்திரனில் காலடி வைத்தனர்.

1969 – உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் ஒண்டுராசுக்கும் எல் சல்வதோருக்கும் இடையே இடம்பெற்ற கலவரங்களை அடுத்து ஆரம்பித்த 6-நாள் போர் முடிவுக்கு வந்தது.

1974 – சைப்பிரசில் அரசுத்தலைவர் மூன்றாம் மக்காரியோசுக்கு எதிராக கிரேக்க ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியை அடுத்து துருக்கியப் படைகள் அங்கு முற்றுகையிட்டன.

1976 – அமெரிக்காவின் வைக்கிங் 1 விண்கலம் செவ்வாயில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

1977 – அமெரிக்கா, பென்சில்வேனியா, யேம்சுடவுன் நகரில் இடம்பெற்ற பெர்ம் வெள்ளத்தில் 84 பேர் உயிரிழந்தனர்.

1979 – இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

1980 – இசுரேலின் தலைநகராக எருசலேம் நகரை ஐநா உறுப்பு நாடுகள் அங்கீகரிக்க முடியாதவாறு ஐநா பாதுகாப்பு அவை 14-0 என்ற வாக்குகளால் தடையுத்தரவைப் பிறப்பித்தது.

1982 – ஐரியக் குடியரசுப் படையினரால் இலண்டனில் நடத்தப்பட்ட இரு வெடிகுண்டுத் தாக்குதல்களில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 47 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

1985 – நெதர்லாந்து அண்டிலிசுவில் இருந்து வெளியேறும் தீர்மானத்தை அரூபா அரசு கொண்டுவந்தது.

1989 – பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி இராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

1992 – செக்கோசிலோவாக்கியாவின் பிரதமர் வாக்லாவ் அவொல் பதவி விலகினார்.

1997 – இலங்கையின் மூதூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஈ. எச். மகரூப் மற்றும் ஐவர் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

2005 – கனடாவில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமாக்கப்பட்டது.

2012 – அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் திரையரங்கு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்க்சி சூட்டு நிகழ்வில் 12 பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் காயமடைந்தனர்.

2013 – கொலம்பியாவின் ஆயுதமேந்திய புரட்சிப் படைப் போராளிகளின் தாக்குதலில் 17 அரசுப் படையினர் கொல்லப்பட்டனர்.

2015 – ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவும் கியூபாவும் முழுமையான தூதரக உறைவை ஏற்படுத்திக் கொண்டன.