• Wed. Jun 19th, 2024

வரலாற்றில் இன்று ஜூலை 19

Jul 19, 2021

சூலை 19 கிரிகோரியன் ஆண்டின் 200 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 201 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 165 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

64 – உரோமை நகரில் பரவிய பெரும் தீ, ஆறு நாட்களில் நகரின் பெரும் பகுதியை அழித்தது.

484 – லியோந்தியசு கிழக்கு உரோமைப் பேரரசராக முடிசூடி, அந்தியோக்கியாவைத் தனது தலைநகராக அறிவித்தார்.

998 – அரபு-பைசாந்தியப் போர்கள்: அபாமியா என்ற இடத்தில் நடந்த சமரில் பாத்திம கலீபகம் பைசாந்திய இராணுவத்தினரைத் தோற்கடித்தது.

1333 – ஆலிடன் குன்றில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து இசுக்காட்லாந்துப் படைகளை வென்றது.

1545 – இங்கிலாந்தின் மேரி றோஸ் என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத் என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் தப்பினர். இக்கப்பலின் எச்சங்கள் 1982 இல் மீட்கப்பட்டன.

1553 – 9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தார். முதலாம் மேரி அரசியாக முடி சூடினார்.

1588 – ஆங்கிலோ-எசுப்பானியப் போர்: எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு ஆங்கிலக் கால்வாயில் நிகழ்ந்தது.

1817 – உருசிய-அமெரிக்கக் கம்பனிக்காக அவாய் இராச்சியத்தைக் கைப்பற்ற கியார்க் சாஃபர் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.

1821 – நான்காம் ஜார்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னராக முடிசூடினார்.

1845 – அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் பரவிய தீயினால் 30 பேர் உயிரிழந்தனர், 345 கட்டடங்கள் அழிந்தன.

1870 – பிரான்சு புருசியா மீது போரை ஆரம்பித்தது.

1900 – பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று.

1912 – அரிசோனா மாநிலத்தில் 190 கிகி எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து கிட்டத்தட்ட 16,000 துகள்களாகச் சிதறுண்டது.

1916 – முதலாம் உலகப் போர்: பிரித்தானிய, ஆத்திரேலியப் படைகள் சொம் சமரில் செருமானிய அகழிகளைத் தாக்கின.

1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் போர்க்கப்பல் ஒன்று அரச கடற்படையின் தாக்குதலில் மூழ்கியதில் 121 பேர் கொல்லப்பட்டனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: உரோமை நகர் மீது கூட்டுப் படைகள் பெரும் வான் தாக்குதலை நடத்தின. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

1947 – பர்மாவின் நிழல் அரசின் பிரதமரும் தேசியவாதியுமான ஆங் சான் மற்றும் அவரது ஆறு அமைச்சர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1952 – பின்லாந்து, எல்சிங்கியில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.

1964 – வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் இடம்பெற்ற பேரணி ஒன்றில், தென் வியட்நாம் பிரதமர் நியூவென் கான் வடக்கு வியட்நாம் வரை போரைத் தொடர அறைகூவல் விடுத்தார்.

1977 – உலகின் முதலாவது புவியிடங்காட்டி சமிக்கை அமெரிக்காவில் அயோவாவில் பெறப்பட்டது.[2]

1979 – நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது.

1980 – மாஸ்கோவில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.

1983 – மனிதத் தலையின் முதலாவது முப்பரிமாண வடிவ வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி வெளியிடப்பட்டது.

1985 – இத்தாலியில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 268 பேர் உயிரிழந்தனர்.

1989 – அமெரிக்காவின் யுனைட்டட் ஏர்லைன்சு விமானம் அயோவாவில் வீழ்ந்ததில் 111 பேர் உயிரிழந்தனர்.

1996 – ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு பீரங்கிப் படகு விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. ஏழு கடற் கரும்புலிகள் இறந்தனர்.

1997 – வட அயர்லாந்தில் பிரித்தானிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர 25 ஆண்டுகள் ஆயுதப் போரில் ஈடுபட்டு வந்த ஐரியக் குடியரசுப் படை போர்நிறுத்தத்தை அறிவித்தது.