• Thu. Dec 19th, 2024

வரலாற்றில் இன்று ஜூலை 31

Jul 31, 2021

சூலை 31 கிரிகோரியன் ஆண்டின் 212 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 213 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 153 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 30 – அலெக்சாந்திரியா சமரில் மார்க் அந்தோனியின் படைகள் ஒக்டாவியனின் படைகளை வென்றன. ஆனாலும் அந்தோனியின் பெரும்பாலான படையினர் அவனை விட்டு விலகியதால் அவன் அடுத்தநாள் தற்கொலை செய்து கொண்டான்.

781 – பூஜி எரிமலையின் பதிவு செய்யப்பட்ட முதல் சீற்றம் இடம்பெற்றது.

1009 – நான்காம் செர்ஜியசு 142வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.

1423 – நூறாண்டுப் போர்: கிரவாந்த் நகரச் சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலேயரிடம் தோற்றது.

1492 – எசுப்பானியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

1498 – தனது மூன்றாவது பயணத்தின் போது கிறித்தோபர் கொலம்பசு டிரினிடாட் தீவை அடைந்தார். இவரே இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவார்.

1588 – எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு இங்கிலாந்தின் கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

1655 – உருசியா லித்துவேனியாவின் தலைநகர் வில்னியூசைக் கைப்பற்றி ஆறு ஆண்டுகள் தமது ஆட்சியில் வைத்திருந்தது.

1658 – ஔரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசராக முடிசூடினார்.

1712 – பெரும் வடக்குப் போர்: தென்மார்க்கு, சுவீடன் கப்பல்கள் பால்ட்டிக் கடலில் மோதிக் கொண்டன.

1715 – கியூபா, அவானாவில் இருந்து எசுப்பானியா திரும்பிக் கொண்டிருந்த 12 எசுப்பானிய புதையல் கப்பல்களில், 11 கப்பல்கள் புளோரிடா கரையில் மூழ்கின. சில நூற்றாண்டுகளின் பின்னர் இவற்றின் சிதைவுகளில் இருந்து பெருமளவு புதையல் மீட்கப்பட்டன.

1741 – புனித உரோமைப் பேரரசர் ஏழாம் சார்லசு ஆஸ்திரியா மீது படையெடுத்தார்.

1790 – முதலாவது அமெரிக்கக் காப்புரிமம் பொட்டாசு செயன்முறைக்காக சாமுவேல் ஒப்கின்சுக்கு வழங்கப்பட்டது.

1805 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்.

1865 – உலகின் முதலாவது குற்றகலத் தொடருந்து சேவை ஆத்திரேலியா, குயின்சுலாந்து மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1913 – பால்க்கன் நாடுகள் புக்கரெஸ்ட்டில் அமைதி உடன்பாட்டுக்கு வந்தன.

1932 – செருமனியில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் நாட்சி கட்சி 38% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.

1938 – கிரேக்கம், துருக்கி, உருமேனியா, யுகோசுலாவியா ஆகிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என பல்காரியா உடன்பாட்டுக்கு வந்தது.

1938 – பெர்சப்பொலிஸ் நகரில் அகாமனிசியப் பேரரசர் முதலாம் டேரியசின் தங்கம், மற்றும் வெள்ளித் தட்டுகளைத் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்தனர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: சிமோலென்சுக் சண்டை முடிவுக்கு வந்தது. செருமனி 300,000 சோவியத் செஞ்சேனைப் படையினரைப் போர்கைதிகளாகப் பிடித்தனர்.[1]

1948 – இலண்டன், 1948 ஒலிம்பிக் போட்டிகளில் 400 மீ தடை ஓட்டப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த டங்கன் உவைட் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.[2]

1954 – ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான இத்தாலிய குழு ஒன்று கே-2 கொடுமுடியை எட்டியது.

1964 – சந்திரனின் மிக அருகில் எடுக்கப்பட்ட படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.

1971 – அப்பல்லோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் தரையுலவியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர்.

1972 – பிரித்தானிய இராணுவம் வட அயர்லாந்தின் ஆட்கள் செல்ல முடியாத புறநகர்ப் பகுதிகளைக் கைப்பற்றியது. சூயெசு நெருக்கடிக்குப் பின்னர் பிரித்தானியாவின் மிகப்பெரும் இராணுவ நடவடிக்கை இதுவாகும்.

1973 – அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் ஜெட் விமானம் ஒன்று மாசச்சூசெட்ஸ், பாஸ்டன் விமான நிலையத்தில் மோதியதில் 89 பேர் உயிரிழந்தனர்.

1987 – ஆல்பர்ட்டா மாநிலத்தில் எட்மன்டன் நகரில் இடம்பெற்ற சூறாவளியில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.

1988 – மலேசியா, பட்டர்வொர்த் நகரில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் உயிரிழந்தனர், 1,674 பேர் காயமடைந்தனர்.

1991 – ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் கையெழுத்திட்டன.

1992 – சியார்சியா ஐநாவில் இணைந்தது.

1992 – நேபாளத் தலைநகர் காட்மாண்டில் தாய்லாந்து விமானம் ஒன்று மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 113 பேரும் உயிரிழந்தனர்.

1999 – நிலாவில் உறைநீரைப் பற்றி ஆராய்வதற்காக சென்ற நாசாவின் டிஸ்கவரி விண்கலம் நிலாவின் தரையுடன் மோத வைக்கப்படது.

2006 – பிடெல் காஸ்ட்ரோ தனது அதிகாரத்தைத் தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.

2006 – ஈழப்போர்: திருகோணமலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

2007 – வட அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவம் தனது மிக நீண்ட கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அங்கிருந்து வெளியேறியது.

2012 – மைக்கல் ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக அளவு பதக்கங்களைப் பெற்று 1964 சாதனையை முறியடித்தார்.

2014 – தாய்வானில் எரிவாயுக் குழாய் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர், 270 பேர் காயமடைந்தனர்.